பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

ஏராளமான பணத்தைத் தேடி வைத்துள்ள பணக்காரர்கள் தானே இதைப்பற்றி கவலைப்பட வேண்டும்!

மக்களுக்கு இனி அத்தகைய அச்சமும், ஆயாசமும், பரிதவிப்பும், பயமும் ஏற்படுவதற்குக்கூட காரணமில்லாமற் போய்விட்டது. ஏராளமான சீர்திருத்தத் திருமணங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்ற காரணத்தால், இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களும் இனி சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது.

ஆச்சாரியார் மந்திரி சபையில் சட்ட மந்திரியாக இருந்த குட்டி கிருஷ்ண நாயர் காலத்தில் சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றிய கேள்வி நீதிமன்றங்களில் எழுந்தது. இதன் காரணமாக அவர் ஏற்கெனவே நடந்துவிட்ட சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரு சட்டம் கொண்டு வநிதார்.

ஆனால் இன்று காமராசர் ஆட்சியில் இதனை ஏற்கனவே நடந்த திருமணங்கள் மட்டுமல்லாமல், இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படியாகும் என்ற முறையில் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பேசி வந்த நிலைமை அடியோடு மாறிவிடு-

அ-2