பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும், ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோர தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பாரத்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயகன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்?

மக்கள் வாழவேண்டும் உலகம் உருப்படவேண்டும். வறுமை ஒழிய வேண்டும், உலகத்தில் உண்மை. தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது. எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காக் கடவுளை வரம் கேட்ட பக்தர்கள் யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.

எல்லோரும் தங்கள் சுயநலத்தைத்தானே பெரியதாகக் கருதியிருக்கிறார்கள். எனக்கு இந்திர பதவியைக் கொடு' என்றொரு முனிவர் கேட்பார். எனக்குக் காமதேனு வேண்டும், கற்பக விருட்சம் தேவை என்று மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேனகை, ரம்பை, திலோர்த்தனை ஊர்வசி போன்ற தேவலோகத்து நடன மாதர்களின் சுகத்தையனுபவிக்க சொர்க்க வாசகம் தேவையென்று ஒரு நாயன்மார் கேட்பார்.

வைகுந்த பதவியும் சிவலோக வாசத்தையும் தங்ககளுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடியபாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே தவிர; நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள் கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்கவில்லை, அழைப்பதுமில்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்-