பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


கானின் படை ஈடுபட்டிருந்தது. கூடாரத்திலே அமர்ந்து வர இருக்கும் வெற்றியை நினைத்துக் குதூகலமாக வீற்றிருந்தான் அப்சல்கான். அந்தக் காட்டிலே கோபிநாத் பண்டிட் ஜீயும், அதே இடத்தில் உலாவுகிறார். அவரிடம் வாள் இல்லை. ஆனால் மற்றக் குலத்தவரைத் தம் காலடியிலே காண்பதற்கான மகத்துவத்தை மகேஸ்வரனிடம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் பிரம்மகுலத்தவர், கோபிநாத் அப்சல்கான் சிவாஜியை முறியடிக்கப் படைபலத்துடன் வந்ததுடன், சமரஸம் பேசச் சிவாஜி விரும்பினால், அதை முன்னின்று முடித்து வைக்க அந்த முப்பிரியானையும், அழைத்து வந்தான் கோபிநாதரின் மனதிலே என்னென்ன எண்ணங்கள் கிளம்பின என்பதை வரலாறு எங்ஙனம் எடுத்துக் காட்டும்! சரிதங்களிலே சம்பவங்களைக் கொண்டு தானே, அவற்றுக்கான சிலபல சிந்தனைகளை யூகிக்க முடியும்! கோபி நாத பண்டிட்ஜி தூது அனுப்பப்பட்டார் சிவாஜியிடம் பெரியதோர் படைதயாராகயிருக்கிறது என்பதை எடுத்துக் கூறி, சிவாஜியைப் பணியவைக்கக் கிளம்பினார் கோபிநாத். மகத்தான பொறுப்பென ஓர் செயல் தரப்பட்டது, என்பதை எண்ணும்போது கோபிநாந் பெருமை அடைந்துதான் இருப்பார். ஒரு மண்டலாதிபதியின் தூதராக, மற்றோர் மாவீரனிடம் செல்வது சாமான்யமான காரியமல்ல. பண்டிட் ஜி, புறப்பட்டார். நாடுகளைக் காடாக்கி விடக்கூடிய படைபலம் பெற்றிருந்த அப்சல்கானின் தூதராகக கிளம்பிய அந்த ஆரியனின் அகம், முதலில் பெருமை கொணடிருக்கும். பிறகோ சிந்தனை வேறாகித்தான் இருக்கும் பரத கண்டத்திலே பல் வேறு இடங்களிலே நிலைபற்றிய நினைப்பு தோன்றாதிருக்குமா? கோபிநாத்தின் மனக்கண் முன் அப்போது என்னென்ன காட்சிகள் தோன்றியிருக்கும். அஸ்தினாபுரம் டில்லியாகி அங்கு அவுரங்கசீப் அரியாசனம் ஏறும் காட்சி, ஓர் புரம்! வங்கத்திலே இஸ்லாமியரின் வல்லமையால் ஆட்சி நிறுவப்பட்ட காட்சி மற்றோர் புறம்!