பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


என்ற ஏற்பாட்டை உருவாக்கிற்று! வீர சிவாஜிக்கு வாள் ஏந்தத் தெரிந்த அளவுக்கு வஞ்சனை வீசத் தெரிந்திருக்க முடியாது. வேதிய குலத்தவராம் கோபிநாத் பண்டிதர், அந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டார், பரம்பரைப் பழக்கத்தின்படி! சிவாஜி மகத்தானதோர் 'இராஜ தந்திர' வெற்றி பெற்றதாக சந்தோஷித்தான் பண்டிட் கோபிநாத், மரரட்டியத்தை ஆரிய சேவா பீடமாக்கி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். அப்சல் கானோ திறமை மிகுந்த தூதுவர், திரும்பி வருவார், சீறிப்போரிட்ட சிவாஜியின் சரணாகதிச் செய்தியைத் தூக்கிக்கொண்டு, என்று எண்ணிச் சாய்ந்திருந்தான். கோபிநாத் பண்டிட்ஜி வந்து சேர்ந்தார்--அப்சல்கானின் கொலைக்கான ஏற்பாடு செய்துவைத்துவிட்டு! அப்சல் படை அறிவான், போர் அறிவான். பாதகம் சதி, பசப்பு இவைகளைத் தாங்கி நடமாடும் மனித உருவங்கள் தன் பக்கத்தில் இருப்பதை எங்ஙனம் அறிவான்!

"சலாம்! பண்டிட்ஜி" என்று சந்தோஷமாக, கோபிநாத்தை வரவேற்றான். அன்று மட்டுந்தானா! 1946-ல் கூடத்தான்! வாங்க ஸ்வாமி' என்று கோபிநாதர்களை வரவேற்கிறார்கள்!

'சரண் அடையச் சம்மதித்து விட்டான்!'

'பஹுத் அச்சா! பண்டிட ஜீ! அவன் மகாமுரடன் என் பார்களே, எப்படிப் பணியச் சம்மதித்தான்?'

"முரடனாக இருக்கட்டுமே, சைன்யாதிபதி! அவன் நம் என்ன குருடனா, இந்தப் பிரமாண்டமான படை நம்மிடம் இருப்பதை அறியாதிருக்க!"