பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


அங்குவந்திருந்தவர்களில் ஒருவர் காதில் அந்தச் சொற்கள் விழுந்தன. 'குற்றமற்றவனாயின், உலக வரலாற்றிலேயே மிகக் கொடுமையாகத் தண்டிக்கப் பட்டவன் அவன்தான்" என்று அவர் முணுமுணுத்தார். அவர்தான் பிரெஞ்சு நாட்டுப் பெரும் இலக்கிய ஆசிரியர் அனதேல் பிரான்சு.

மற்றொருவர் அங்கே வரவில்லை. ஆனால் அவர்காதிலும் டிரைபஸின் கூககுரல் விழுந்தது. எழுதுகோலை வைத்துவிட்டு, கைகளைப் பிசைந்துகொண்டே அங்குமிங்கும் அறையில் அவர் உலாவினார் வெறித்த பார்வையுடன். 'அநீதிக்கு இடமளிக்கமுடியாது' என்று கூறினார். அவர்தான் ஜோலா.

🞸🞸🞸

டிரைபசின் நண்பர்கள், ஜோலாவிடம், சில குறிப்புகள் கொடுத்தனர். அவனுடைய தூய்மைக்கான ஆதாரங்கள். அவைகளைத் துணைக்கொண்டு வேலைசெய்ய வேண்டும் டிரைபசை மீட்க வேண்டும்; நீதியை நிலை நாட்ட வேண்டும். "முடியுமா?" சே? என்ன கேள்வி அது கோழையின் மொழி.

ஜோலா, பேனாவை எடுத்தார். பிரான்சு முழுவதும் டிரைபசை வெறுக்கிறது. ஆம்! அவனுக்காகப் பரிந்து பேசுபவரையும் பகைக்கும். இலக்கிய மன்றம் இடித்துரைக்கும். ஆமாம்! ஆனால் அநீதிக்குச் சக்தி அதிகம் இருக்கிறது என்பதற்காக அதன் போக்கில் விட்டு விடுவதா, அதன் அடிபணிவதா, அதற்கா, இந்த அறிவு ஆற்றல்? விளக்கைத் தூண்டினார்; குறிப்புத் தாட்களையும் ஆதரக் கடிதங்களையும் ஒன்று சேர்த்தார்; களத்திலேபுகும் வீரரானார்; உண்மை எழுந்தது! எழுதினார், எழுதினார், இரவெல்லாம் எழு-