பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


என்பது தெரியும், அதைப் பற்றிக் கவலையில்லை. நான் நீதி வேண்டுகிறேன். குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்து விட்டது; விளக்கமான மறு விசாரணை நடப்பதாக!"

பத்திரிகைக் கூடம் பரபரப்புடன் வேலை செய்யத் தொடங்கியது. முதல் பிரதி--இரண்டு மூன்று--வேகமாக ஆயிரக்கணக்கில் பத்திரிகை குவிந்தது. ஜோலாவின் "குற்றச்சாட்டு" பாரிசைக் கவ்வியது. எதிர்பாராதது. ஒருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. யுத்த மந்திரிசபை கூடியது. ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது? படைக் குழுவினர் கூலியாட்களை அமர்த்தி, 'ஜோலா வீழ்க?' எனக் கூவச் செய்தனர். வீதிகளில் மூர்க்கத்தனமான சம்பவங்கள் நடைபெற்றன. "அரோரி" பத்திரிகைக்கூடம் தாக்கப்பட்டது. "குற்றச்சாட்டு" செய்தித்காள்கள் கிழிக்கப்பட்டன. ஜோலாவின் கண்முன்னால் அவருடைய வைக்கோலுருவமும் டிரைபசின் வைக்கோலுருவமும் தீயிலிடப்பட்டன. ஜோலா துரத்தப்பட்டார். அவருடைய வண்டிக்குள் கற்கள் விழுந்தன இரத்தக் காயத்துடன் ஜோலா வீட்டிற்குச் சென்றார். வீட்டில் தயாராகக் காத்துக் கொண்டிருந்த போலீஸ் ஜோலாவைக் கைதாக்கியது.

ஜோலாவின் வழக்கு ஆரம்பமாகியது. ஜோலாவிற்காகத் திறம்பட வாதித்தவர் லபோரி. வழக்கு ஆரம்பமாகும் பொழுது, அது தனிப்பட்ட வழக்கென்றும் டிரைபஸ் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டதல்லவென்றும் நீதிபதி கண்டிப்பாகக் கூறினார். அது ஒரு இராணுவத்தினரின் நாடகம் போல முடிந்தது கடைசியில் ஜோலா கூறியவை மறுக்க முடியாதன; "நான் எழுதுபவன், பேசும் திறன் படைத்தவனல்ல. எனது வாழ்நாளில் பெரும் பகுதி