பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

71



படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி, தோழி! பல் நாள்
உரவுஉரும் ஏறொடு மயங்கி
இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.

- பரணர் அக 222

“தோழியே! வானத்தில் மிகவும் உயர்ந்த நீலநிற மலையின் பக்கத்தில் உள்ள நாட்டை உடைய தலைவன் உண்டாக்கிய நோயால் உன் மேனியின் அழகு அழிந்தது அதனால் யான் இதனைக் கூறுவேன்' கேட்பாயாக; முழவு முட்டுதலின் ஒலி ஆரவாரம் பொருந்திய துறையில் நிகழும் விழாவில் ஆடிய, திரண்ட அழகால் நிமிர்ந்த திரண்ட தோளையுடைய ‘ஆட்டன் அத்தி' என்பவனின் அழகினை விரும்பிப் பரந்து வநது தாழ்ந்து தொங்கும் கூந்தலையுடைய காவிரியானவள் அவனைக் கவர்ந்து கொண்டாள் அதனால், அவனுடைய மனைவியான ஆதிமந்தி திசையெல்லாம் தேடி வாடினாள் அவளுக்கு அவளுடைய காதலனைக் காட்டி, ஒலிக்கும் கடலில் புகுந்து மறைந்தாள் பாடுதல் அமைந்த சிறப்பையுடைய மருதி, அவளைப் போன்ற சிறந்த புகழைப் பெறும் பொருட்டு, பலநாளும் வலிய இடியேற்றுடன் கூடி இரவு முழுவதும் மழை பெய்தலால் ஈரம் உடைய சேற்று வழியில் நம் தலைவனைத் தேடிச் செல்வோம்!” என்றாள் தலைவி தன் தோழியிடம்

423. தலைவர் இரவில் செல்வது நல்லது


பிரசப் பல்கிளை ஆர்ப்ப கல்லென
வரைஇழி அருவி ஆரம் தீண்டித்
தண்என நனைக்கும் நளிர் மலைச்சிலம்பில்
கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
கல்முகை நெடுஞ்சனை நம்மொடு ஆடி
பகலே இனிதுஉடன் கழிப்பி, இரவே
செல்வர்ஆயினும் நன்றுமன் தில்ல -
வான்கண் விரிந்த பகல்மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள்வீப்