உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அமுதத் தமிழிசை (பாட்டு-62) ராக மாளிகை சான்ருேர் தாளம்-ஆதி (திஸ்சநடை) 1. மாண்டு கண்ணிகள் இன்பத் தமிழ்க்கவிஞன்-இளங்கோ எங்கள் குலத்தலைவன்-அவன் பொன்னடி தன்னை என்றும் வணங்கிப் போற்றிப் பணிந்திடுவோம்= அண்ணன் அரசுரிமை பெற்றுப்புவி ஆட்சி செயல் முறைமை-என எண்ணித் துறவுநிலை கொண்ட அவன் ஏற்றத்தைப் போற்றிடுவோம் 2. திலங் திங்களை ஞாயிற்றினை வான்மழைத் தேவியைக் காவிரியை-எங்கும் பொங்கும் இயற்கையினை இறையெனப் போற்றியமா கவிஞன்பெண்ணின் பெருமையெல்லாம் உலகில் பேசி முழக்கவந்த-முதல் வண்ணத் தமிழ்க்கவிஞன்-அவன் புகழ் வாழ்த்தி வணங்கிடுவோம் 3. சந்த்ரகெளன்ஸ் முப்பெரும் வேந்தருக்குள் நெடும்பகை மூளும் நிலைவெறுத்தான்-தமிழ்இனம் ஒப்புறவோடிணைந்தே உயர்ந்திட ஒற்றுமை முரசொலித்தான்= கண்ணகி தேவியென்னும் வீரப் பெண்ணின் பெருமை தன்னை-ஒரு உன்னத காவியமாய்ச்-செய்துதமிழ், உலகினை வாழவைத்தான் =(இன்ப) (இன்ப)