உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அம்பிகாபதி காதல் காப்பியம்

விடுத்திடு வாயில் வியலரண் மனையை,
என்னுடை இருப்பிடம் எதுவோ அங்கண்
நின்னையும் காணலாம் நினைவில் கொள்கென,

(அமராவதி)

இதன்பொருள் என்னென எழில்மொழி உசாவ,

(அம்பிகாபதி)

145 அடுத்த முழுநிலா நாட்குள், ஆமாம்,
கொடுத்திடு வாருனைக் கொற்றவன் எனக்கு;
நமது திருமணம் நன்னர் முடிந்தபின்
எமதிடத் திலேயே இருப்பைநீ யென்ன,

(அமராவதி)

எந்தை யுமக்கே எனைத்தரு வாரென
150 எந்த வகையில் இயம்புகின் றீரென

(அம்பிகாபதி)

தருமாறு செய்யத் தகுதியுண் டென்னிடம்
வருமா றுனைச்செய வழிவகை உண்டென,

(அமராவதி)

திருமணம் முடிந்திடின் தீருநம் கவலை
பெருமணம் வீசப் பீடுறும் வாழ்வென,

155 நம்பி, ஆங்கவள் நயககவொன் றுரைப்பான்:
ஒருதிருக் குறளின் உண்மையைக் கெடுக்கிறாய்:

141. வியல் - பெரிய, அகன்ற 142. அங்கண் - அவ்விடம். 144. எழில்மொழி - அமராவதி; உசாவ - கேட்க. 146. கொற்றவன் - அரசன். 148. இருப்பை - இருப்பாய். 154. பெருமணம் - பெரியபுகழ்மணம்.