உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 129


(1) பெண்டி ராகப் பிறந்த வரேநனி
பெரிய பேறு பெற்றவ ராவார்
மண்டிணி ஞாலம் மாண்புற வேயுயர்
மக்களைப் பெற்றுத் தருபவர் யாரோ?
கண்டினும் இனிய கண்மணி மக்களைக்
கட்டிக் காத்து வளர்ப்பவர் யாரோ?

130 மண்டிய நோய்க்குத் தாம்மருந் துண்டு
மக்கட் குநற்பால் ஊட்டுவோர் யாரோ?

(2) இரப்பவர்க் குணவினை இன்முகத் துடனே
ஈந்திட் டவர்பசி இரிப்பவர் அவர்தாம்.
நிரப்பும் அன்பொடு நித்தம் கொழுநரின்
நீள்புகழ் காத்து நிற்பவர் அவரே!
கரப்பிலா உளத்தொடு விருந்தைக் கண்டே
களிப்பொடு பணிவிடை செய்பவர் அவரே!
புரப்பவர் உலகைப் பூரிப் புடனே
பூவைய ரேயெனில் பொருத்தம் ஆமே!

135(3) கணவ ரின்பசி கண்ணுறும் போதெலாம்
கரிசன்த் தாயாய்க் காணலாம் அவரை;
கணவர்க் குப்பிணி கண்டிடுங் காலை
கண்ணாம் மருத்துவத் தாதியும் ஆவார்;
கணவரின் உள்ளம் கலங்கும் போதெலாம்
கருத்துரை வழங்கும் அமைச்சரு மாவார்;
கணவ ரின்பிழை காணப் பொறாஅமே
கடிந்திடும் கல்வி ஆசான் அவரே!

(4) மங்கைய ரின்றி மற்றவர் ஆடவர்
மாநிலந் தன்னில் வாழ்வ தேது?
நங்கையர் காதலுக் கேங்கிக் கிடந்தே
நற்றவம் புரிபவர் நம்பிய ராவார்;


128. மண்டிணி - மண் திணி. 129,கண்டினும் - கற்கண்டினும். 131. இரிப்பவர் - போக்குபவர். 132. கொழுநர் - கணவர். 133.கரப்பு - மறைப்பு. 134. பூவையர் - பெண்கள். 135. கரிசனம் - அன்பு, அக்கறை. 136.தாதி - செவிலித் தாய். 138.ஆசான் - குரு, ஆசிரியன்.140.நம்பியர் - ஆண்கள்.

அ. -9