பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 அம்பிகாபதி காதல் காப்பியம்


விடுத்திடுமிவ் வுரையின்பொருள் விளங்ககில்லேன்
விரித்துரைப்பீர் என்றேயான் வினவிய காலை,

320 எடுத்துரைத்தீர் மணந்திடுவோம் என்ற செய்தி;
இந்தமுழு நிலா நாளில் இணைந்தே விட்டேன்."

(வேறு)



(6) "அருந்தினிய பாவமிழ்தம் ஆக்கிடுநல்
        லங்கை எங்கே?
விருந்தளித்த போதுகவி விருந்தளித்த
        வியன்வா யெங்கே?
இருந்தினிய முத்தங்கள் ஈந்திடுநல்
        லிதழ்கள் எங்கே?
பொருந்திடவே இறுகணைத்துப் புல்லியவன்
        பொன்மார் பெங்கே?"

(7) "உள்ளிருந்திங் கெழுந்துவர ஒல்லாதோ
        ஒருசொல் கூறீர்?
பள்ளுப்பா யாழ்மீட்டிப் பாடிடவா
        பகரும் வந்தே!
கள்ளிருக்கும் மலர்துறந்தேன் கதறுவது
        காதில் விழுமா?
எள்ளருபன் முத்தங்கள் ஈந்திடுவேன்
        எழுந்து வாரீர்!"



319. விடுத்திடும் சொல்லுகின்ற. 321. அருந்தினிய - அருந்த இனிய (அ - தொகுத்தல் விகாரம்); பா அமிழ்தம் - பாட்டாகிய அமிழ்து. 322. கவி விருந்து - பாட்டாகிய விருந்து. 323.இதழ்கள் - உதடுகள். 324. இறுகணைத்து இறுக அணைத்து; புல் விய - தழுவிய; வன் - வலிமையுள்ள; பொன் மார்பு - அழகிய மார்பு. 325. ஒல்லாதோ - முடியாதோ? 326. பள்ளுப்பா - பள்ளு என்னும் ஒரு வகை நூல் பாட்டு; பகரும் - சொல்வீராக. 327.கள்-தேன், 328. எள்ள அரு பன் - இகழ வியலாத பல (இனிமையான பல).