பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாடு நகர் நலங்கூறு காதை

27

(நகர் வளம்)

அரண்மனை நிகழ்ச்சியை அவ்வஞ் ஞான்று
திரண்முனைக் குணில்கொடு தெருட்டும் முரசொலி,
கனிவொடு வழிபடுங் கடவுட் கோயிலில்

130 இனிமையா யிசைக்கும் இயங்கள் எழுப்பொலி,
சொற்போர்ப் புலவர் சூழுமாய் வுரையொலி,
மற்போர் பயிலும் மறவரின் இடியொலி,
விற்போர் பழகும் வீரர் விடுப்பொலி,
நெற்போர் குவிப்போர் நிகழ்த்தும் நெட்டொலி,

135 கரும்பின் பிழிவைக் கனல்கொடு காய்ச்சி
விரும்பும் வெல்லமாய் விளைப்பவர் வினையொலி,
சிறுமியர் செய்யும் சிற்றில் ஆட்டொலி,
சிறார்விளை யாடும் சிறுதேர் இழுப்பொலி,
மடையில் சேல்கள் பாய மங்கையர்

140 குடையுஞ் சுனையைக் கூடிக் குழப்பொலி,
கோழி சிவல்பூழ் கொழுதகர் எதிரியை
வீழச் செய்து வென்றிடு போரினை
வீழு மழவரின் விண்ணதிர் வெடியொலி,
பாடல் வென்றி பழகியாழ் வென்றி

145 ஆடல் வென்றி ஆட்ட வென்றி
ஒடல் வென்றி கொள்வோர் உழக்கொலி
விழாப்பல அயர்வோர் வீதியில் வெளியில்
குழாமாய்க் கூடிக் குலவும் குழுவொலி,
வணிகச் சந்தையில் வாங்குவோர் விற்போர்

137. ஞான்று - பொழுது. 128. குணில் - குறுந்தடி; கொடு - கொண்டு; தெருட்டும் - தெரிவிக்கும். 180. இயங்கள் - வாத்தியங்கள். 135. பிழிவு - சாறு. 189. சேல் - மீன். 141. சிவல் - கவுதாரி, பூழ் - காடை, தகர் - ஆட்டுக் கடா. 148. வீழு மழவர் - விரும்பும் வீரர். 145. ஆடல் - நடனம்; ஆட்டம் - விளையாட்டு. 146. உழக்குதல் - குழப்பி எழுப்புதல். 147. அயர்தல் - கொண்டாடுதல். 148. குழாம் - கூட்டம்.