பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர் பாராட்டுக் காதை

89

 

மலரைக் கசக்குதல் மாண்பா காது
மலரைப் பார்த்தே மகிழ வேண்டுமால்.
உன்துடல் கசக்கலோ உடலுறவு கொள்ளலோ

130 எனதுளம் மடமையென் றெண்ணல் செய்யுமே.
வாடாது வருந்தாது வண்ணத் திருமேனி
ஆடா தசையா தமைதியா யழகாய்
கண்கள் உறுநிலைக் கண்ணுடிப் பேழையில்
உண்கண் உன்னை உள்ளே வைத்துக்

135காட்சிப் பொருளாய்க் காணச் செய்வதே
மாட்சி யுள்ள மக்கட் பண்பாம்.
அத்துணை உடலமைப் பழகாய் வாய்த்துள
வித்தகக் கலைகளின் வியன்கரு வூலம்நீ
உன்னைக் கண்டுகண் டுள்ளம் சுவைத்தலே

140என்னை வினவின் ஏற்றதாம் என்ன,

(அமராவதி)


அமரா வதியவற் கறைய லுற்றாள்:
இத்துணைப் புகழ்ச்சி ஏலா தெற்கு
வித்தை காட்டி வேடிக்கை செய்கிறீர்
என்னைத் தொடுதல் இயலா தாயின் 1

145பின்னர்ப் பேசுவம் பிரிந்து செல்வம்;
வனிதை யொருத்தி வலிந்து விரும்பியும்
இனிது நயவா தெடுத்தெறிந்து விட்டீர்
இந்த மானம் என்னைக் கொல்லுமால்
எந்த உயிரோ டினியான் வாழ்வேன்?

150தற்கொலை யொன்று தவிரவிவ் வுலகில்
எற்கு வழிவே றில்லையென் றறைய,


138. கண்கள் - துவாரங்கள்; உறு - பொருந்திய, பேழை - பெட்டி; நிலைப்பேழை - அலமாரி. 133. முழுதும் காற்றுக்காகத் துவாரங்கள் உள்ள கண்ணுடி அலமாரி. 134. உண்கண் - மையுண்ட (மைபூசிய) கண். 138. வித்தகம் - வியப்பு, அறிவு: கருவூலம் - பொக்கிஷம். 143. ஏலாது - ஏற்காது; பொருந்தாது; எற்கு - எனக்கு. 151. அறைய - அறிவிக்க.