பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


திராவிடபாஷையாம் தென்மொழியையும், வரிவடிவிலி யற்றி பாணினியார் வசமும், அகஸ்தியர் வசமுமளித்து தேசமெங்கும் வரிவடிவ பாஷைகளப் பரவச்செய்ததுடன் சத்தியதன்மத்தையும் அதுகொண்டே உறுதிபெறச்செய்து உலக சீர்திருத்த மக்களுள் ஆதியாக விளங்கி சர்வசீவர்களுக்குஞ் சுகப் பேற்றையே விளக்கிவந்த செயல்களுக்குத் தக்கவாறு அவரை ஆதிகடவு ளென்றும், ஆதி தேவனென்றும், ஆதிசிவனென்றும், ஆதிபகவனென்றும், ஆதி ஈசனென்றும் ஆயிரத்தியெட்டு நாமங்களால் கொண்டாடி வந்தவைகளை வடதேசமுதல் தென் தேசம் வரையில் நாட்டியுள்ள சிலாசாசனங்களாலும் செப்பேடுகளாலும் வரைந்துள்ளவற்றை நன்காராயாமலும் பௌத்தர்களால் இயற்றியுள்ள அமரம்பாணிநீயம், முன்கலை திவாகரம், பின்கலை நிகண்டு மற்றுமுள்ள இலக்கண இலக்கிய நூற்களை உணராமலும் கிள்ளுக்கீரை குப்பைக்கீரைபோல் முன்னாநாள் முளைத்த விஷ்ணுமதத்தையும் நேற்று முளைத்த விசிஷ்டாத்வைதத்தையும் பெரிதென்று பிலிக்கி படாடம்பங்காட்டி வரைந்துள்ள சுட்டுக்கடிதத்தால் பாஷைகளின் தோற்ற ஆராய்ச்சியும் மொழி முதலின் பொருளாராய்ச்சியு மில்லாரென்றே துணிந்து கூறுவாம். உளராயின் கடவுளென்னும் மொழி யாவர்பாற்றோன்றி என்னூற்களில் முதலாக வளர்ந்துள்ளனவென்றும் அதன் பொருளறிந்திருப்பார். அம்மொழியினுற் பவமும் அதன் பொருளும் அறியாதவராதலின் தனது சுட்டுக்கடிதத்தில் மனம்போன வினாக்களைப் பிலுக்கிவிட்டார். அவ்வினாக்களைப் பொருளறிந்து வரைவரேல் போந்த விடை கிடைக்கும். அங்ஙனமின்றி மதுரைக்கு மனிதனுண்டா குதிரைக்குக் கொம்புண்டாவென்னும் வினா எழுமேல் விடைகள் தடையுறுமென்னுந் தருக்க சாஸ்திரமு மிவரறியாரென்பது திண்ணம். சரித்திர ஆராய்சியின்றியும், சாஸ்திர ஆராய்ச்சியின்றியும் சாமிகளா ராய்ச்சி இன்றியும், பாஷைகள் தோற்ற ஆராய்ச்சியின்றியும், மொழிமுதற் பொருட்களா ராய்ச்சியின்றியும், வினாவிடுக்குந் தருக்க சாஸ்திர உணர்ச்சி யின்றியும் விடுத்துள்ள அஞ்ஞான சுட்டுக்கடிதத்துள் வடமொழி தென்மொழி கலந்த அந்தகார வாக்கியங்களைப் பிலுக்குப்படாடம்பங்காட்டி வரைந் துள்ளப் பதர்மொழிகளை இவரையொத்த தாசிரிகளுக்கு வாசித்துக் காட்டுவரேல் காசு கிடைக்கும். பௌத்தர்களிடங்காட்டுவதால் ஏசுகிடைக்கு மென்பதை எளிதில் அறிந்துக்கொள்ளுவாராக. இப்போதும் அவர் விடுத்துள்ள சுட்டுக்கடிதத்தில் தன் பெயருடன் வெளிவந்திருப்பரேல் சீர்சீராகக் களைந்து செப்பும் ஏசுகள் யாவையும் ஒப்ப வொப்ப வரைந்திருப்போம். அங்ஙனமிராது தண்டு விடுத்துள்ளோமாக. இன்னும் வருமேல் பின்னும் வருவது சரித்திராதாரக் கோடையிடிகளே யாகும்.

- 7:7; சூலை 23, 1913 -
 

112. சித்திரைச் செல்வம்

வினா : இத்தமிழ்நாட்டின் மக்கள் "ஆடி" மாதத்தில் புது கலியாணப்பெண்களை மாமியார் வீட்டில் வைக்காமல் தாயார் வீட்டிற்கு அழைத்து வந்து மாதம் முடிவானபிறகு மறுபடியும் அனுப்பிவிடுகிறார்களே அது என்னத்தைப்பற்றி அந்தமாதத்தில் என்ன தோஷமிருக்கிறது. இதன் அந்தரங்கத்தை வெளியாக்குவீரென்று தங்களை மிகவும் கேட்டுக்கொள்ளும்.

பி. ராமசாமி, பெங்களூர்.

விடை : அன்பர் வினவிய சங்கை ஓர் சாஸ்திரத்தை அநுசரித்தன்று. அநுபவத்தில் அனுசரித்து வருவதே யாகும்.
அஃது யாதநுபவமென்னில் விவாகஞ்செய்தப் பெண்ணானவள் மாமியார் வீட்டுள்ளிருப்பாளாயின் புருட சம்மந்தத்தால் கருதரித்து பத்தாவது மாதமாம் சித்திரை மாதத்தில் முதல் புத்திரன் தோன்றுவானாயின் அக்குடிக்கே அனர்த்தமுண்டாமென்றும் தந்தை சுகம்பெறானென்றும் வழங்கி வருவதுடன் சித்திரை மாதம் செல்வம் பிறந்தால் ஆனக்குடிக்கே அனர்த்த மென்றும் ஓர் பழமொழியும் வழங்கிவருகின்றது. அவ்வகை சித்திரை மாதம் புத்திரர் பிறக்கும் இல்லங்கள் சிலது சீரழிவதையும், சிலது சுகமடை வதையுங் கண்டுள்ளோம்.