பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 115

முகத்திற்கண் கொண்டு பார்க்கிற மூடர்காள் அகத்திற்கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம் III: 83.
முன்வினை பின்னே சுட்டு முதுகு பிளப்புண்பது I: 74.
முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் I:29.
முயற்சி திருவினையாக்கும் I: 402. III: 20.
முழு பூசணிக்காயைப் பிடி சோற்றுள் மறைப்பது போல் I: 305. II: 428, 543, 547.


தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான் I: 255.
தன்வினைத் தன்னை சுடும் I: 74.
தன் கண்ணில் சுன்னத்தைத் தடவிக்கொண்டு அன்னியன் கண்ணில் வெண்ணெயைத் தடவுவதுபோல் I: 501.
தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா நித்திரைக்கும் சுகமுண்டோ I:689,690.
தட்டிக்கேட்க ஆளில்லாது தம்பி சண்டப்பிரசண்டகாலம் I: 49. III: 45.
தவிக்கு முயலை அடிப்பதுபோல் I: 311.
தலைநோய்க் கண்டவன் தலையணை உறையை மாற்றிப்போட்டுக் கொள்ளுவது போல் I: 260.
தன் கண்ணிலிருக்கும் துரும்பை எடாது அந்நியன் கண்ணிலிருக்கும் சிறாவை நோக்குவது போல III: 22.
தானு வெந்து ஊரையும் வேகடித்த குரங்கு I: 248.
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் I: 208.
தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதுபோல் I:69, 234, 297, 328, 377, 515, 716.
துரும்புங் கலத்தண்ணீரைத் தேக்கும் I: 29, 214. II:629.
தூர்ந்த மண்ணை வெட்டிக் கிளப்புவது போல் I: 249.
தெய்வம் நின்று கொல்லுமாயின் அரசன் அன்றே கொல்லும் 1: 445.
தெண்ட சோற்று இராமர்களைப் போல 1:49.
தொன்னைக்கு நெய்யாதரவா நெய்க்கு தொன்னையாதரவா I: 598.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் விடாது I: 255, 336, 477. III: 26.


நல்லாரொருவருளரேல் அவர்பொருட்டெல்லோர்க்கும் பெய்யுமழை I: 718.
நரியினிடம் ஏமார்ந்த காக்கை கதைபோல் I: 111.
நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமைப் போகாது I: 3.
நாளுக்குநாள் நகுந்ததடி யம்மானே I: 62.
நெல்லஞ் சோற்றுக்கு கடித்துக்கொள்ள பதார்த்தம் வேண்டுமோ I: 30.
நெருப்பில் விழுந்த தேளை அப்புறப்படுத்துவது போலும் I: 364, 424, II: 768.