பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /9


எல்லோருக்கும் ஆகாரமாயினோம். உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் புளிவுருதிறண்டு அறுசுவையிலொன் றாயினோம். உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் வெல்ல வுருதி றண்டு இன்னமுதாகி தேவர்களுக் கும் மக்களுக்கு மினிய பாகாயினோ மென் றகங்குளிர்ந்து முகமலர்ந்திருப்பள்.

இவ்வகை யிந்துதேச முதுவெலும்பாக விளங்கும் பறையனென் போனைப் பழிகூறிய பாவ லரையொத்த நாவலர்கள் இன்னும் பத்து பனிரண்டு பெயர் தோன்றுவார்களாயின் சுதேசீயமும் சீர்கெட்டு சுயராட்சியமும் போர் கெட்டு அழியவேண்டியதேயாம்.

- 1:33; சனவரி 29, 1908 –

14. சுபவிசேஷ பெருஞ்சங்கை

சுதேச சீர்திருத்தங் கருதி வெளிவந்துள்ள பத்திரிகாபிமானிகள் யாவருக்கும் பட்சமான வந்தனம். ஐயன்மின்! நமது தேச சீர்கேட்டிற்கும் ஒற்றுமெய்க் கேட்டிற்கும் மூலம், சாதி பிரிவுகளும் சமய பிரிவுகளுமே எனத் தென்னிந்திய தமிழன் பத்திராதிபன் கூறுகின்றோம்.

இதனை ஏற்றுக்கொள்ளுமன்பர் சாதிகளையுஞ் சமயங்களையும் போக்கத்தக்க உபாயங்களையும் உட் சீர்திருத்தங்களையுந் தங்கடங்கள் பத்திரிகைகளின் வாயிலாய் வெளியிடும்படி கோருகிறோம். எமதபிப் பிராயத்தை ஏற்காது தூற்றுமன்பர்கள் நமதுதேச சீர்கேட்டிற்கும் ஒற்றுமெய்க் கேட்டிற்கும் மூலம் எஃதென்றுணர்த்தி அவற்றை சீர்திருத்துமுறைகளை யேனும் செவ்வனே விளக்கி வருவார்களென்று நம்புகிறோம்.

- 1:36; பிப்ரவரி 19, 1908 –

15. டாக்டர் ஜி.யூ. போப்

சென்னை ராஜதானியில் டாக்டர் போப்துரையென வழங்கிய இம் மகான் நெடுங்கால மிவ்விடமிருந்து தமிழ்பாஷையைக் கற்று சமண முநிவர்களா லியற்றி வைத்திருந்த பஞ்சலட்சணமாகும் இலக்கண நூற்களை எளிய வாசக நடையில் வினாவிடையாக வரைந்து சிறுவர்கள் முதல் பெரியோர்களி ருதியாகக் கற்றுணரச் செய்தவர் இவரொருவரேயாம்.

இவரெழுதியுள்ள இலக்கண ஆதாரங்களைக் கொண்டே பலரும் இலக்கணமெழுத ஆரம்பித்தபோதிலும் அவரது வாசக நடைக் கப்புரமிப்புர மாகவே விளங்கும்.

இவருக்கு முன்பே சில வைரோப்பியரும் பிரான்ஸியருந் தமிழ் கற்று இலக்கண விலக்கியங்களை வரைந்துள்ளாரென்று கூறினுங் கூறுவர். அக் கூற்றுகள் யாவும் நூலாசிரியர்கள் பெயர்களே மாறுபாடன்றி அதனதன் ஆக்கியோன்கள் ஆங்கிலேயர்களன்று.

ஆதலின் போப்பையர் காலத்தில் அவரது இலக்கணங் கற்றுத் தேர்ந்த அன்பர்கள் யாரும் ஒன்றுகூடி அவர் மரணத்திற்கிரங்கி அவர் நமக்களித் துள்ள அழியாபொருளுக் கனந்தானந்த வந்தனங் கூறி அவரது மறபினருக் கோர் ஆறுதற் பத்திரம் அனுப்புவது நன்று நன்றேயாம்.

-1:36; பிப்ரவரி 19, 1908 –

16. வேலைகளறியா வீணர்களிடம் கூலிக்குப் போவது குற்றமேயாம்

அதாவது அச்சியந்திரசாலைகளிலேனும் பஞ்சியந்திரசாலைகளி லேனும் மின்சார இயந்திர சாலை இருப்புப்பாதை இயந்திரசாலைகளி லேனும் மாதக் கூலியோ வாரக்கூலியோ நித்திய நாட்கூலியோ நியமித்துள்ள இடங்களில் அந்தந்த வித்தைகளைக் கற்றிருக்கும் கூலியாட்கள் சென்று வேலை செய்வதியல்பாம்.

அவ்வேலைசாலையின் பிரதம உத்தியோகஸ்தன் அவ்வேலைகளின் நுட்பா நுட்பங்களும் அதன் கஷ்டங்களும் அதனருமெயும் அறிகுவானாயின்