பக்கம்:அருமையான துணை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் 亨盛 ஆளுல், செல்லம்மா அந்த ஊரைக் குறைவாகப் பேசுவ: தோடு திருப்தி அடைவதில்லை. எங்க ஊருலே அப்படி. , . எங்க ஊரிலே இது என்ன மாதிரி நடக்கும் என்று பேச்சுக்குப் பேச்சு புகழுரை தூவிக்கொண்டே இருப்பாள். அவள் வசித்து வந்த கானப்பாடி என்கிற ஊர் அவளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு மட்டமானதாகத் தோன்றியதோ அவ்வளவுக்கு உயர்ந்ததாக, குறைகள் எதுவும் இல்லாததாக, வளங்களும் நலன்களும் நிறைந்ததாக இருந்தது, அவள் பிறந்த ஊரான நல்லுனர்-இதுதான் அவள் எண்ணம். அவள் பேச்சில் தீட்ட விரும்பிய சித்திரமும் இதுவே. இது கானப்பாடிக்காரர்களுக்குப் பிடிப்பதில்லை; அவர் களுக்கு மனவருத்தமும் தந்தது. அவளோடு பேசிக்கொண் டிருக்கிறபோது, இதற்காகக் கோபப்படாமலும், எதிர்த்துப் பேசாமலும் இருந்துவிட்டாலும், பிறகு தங்களுக்குள் வருத்தப்பட்டு, குறை கூறிக்கொள்வார்கள். சிலர் அவளோடு சேர்ந்து பேசுவதுபோல் பேசி, அவளிடமே கிண்டலாகவும் கேலியாகவும் அவளது ஊரைக் குறித்து ஏதாவது சொல்வி வைப்பார்கள். அவள் பாவம், அவர்களுடைய குறும்புப் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் நல்லூர் புராணத்தை வர்ணித்துக்கொண்டிருப்பாள். காணப்பாடிக் கோயிலில் தி ரு வி ழா நடந்துகொண் டிருந்தது. ஏதோ பேருக்கு நடத்துகிற திருவிழாதான். சப்பரம் என்று ஒன்றைத் துாக்கிக்கொண்டு, கோயில் சிப்பந்திகளும் பட்டரும் முன்னே செல்ல, கூலிக்கு அமர்த்தப் பட்ட ஆட்கள் குடுகுடு என ஓடுவார்கள். பூ அலங்காரம் நிறைய இராது; சும்மா இரண்டு சரங்கள் சாமி கழுத்தில் டக்கும். முன்ளுெரு காலத்தில் சிறப்பாக எல்லாம் நடந் திருக்கும். இப்பொழுது அப்படி அப்படித்தான். ஊரே அழுதுவடிகிறபோது, துங்கி வழியும் கோயிலில் உறங்கிக் கிடக்கும் சாமிக்கு இவ்வளவாவது நடைபெறகிறதே என்று உள்ளுர் பக்தர்கள் திருப்திப்பட்டுக்கொள்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/82&oldid=738769" இலிருந்து மீள்விக்கப்பட்டது