பக்கம்:அறநெறி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.tsm’, 25

கூடல் மாநகர் என வழங்கும் மதுரை நகரத்திற்கு மேற்கில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம். அங்கு அமைந்திருக்கும் திருமுருகனின் திருக்கோயில் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முந்தியது.

‘பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும் என்பது பரிபாடல் தொடர் (பரிபாடல் 8:11). இமயமலை சங்ககாலத் தமிழர்க்கே நன்கு அறிமுகமான மலை. புறநானூற்றுப் பாடல் அடியொன்று தென்குமரி வட பெருங்கல் என்று தொடங்குகின்றது. இமயமலைச் சாரல் பற்றியும் அங்கு மான்கள் அந்தணர் இயற்றும் வேள்வி முத்தி வெளிச்சத்தில் உறங்குகின்றன என்றும் குறிப்பிடப் பெறுகின்றது. அறிவிற்சிறந்த ஒளவை பிராட்டியார் பெருங்காற்றை நோக்கி “இமயமலையையே தூக்கியெறியக் கூடிய ஆற்றல் உடைய நீ, துணைவரைப் பிரிந்து வrடும் பெண்கள்மீது வீசித் துன்புறுத்தலாமா? என்று வினவும் போக்கில் “இமயமும் துளக்கும் பண்பினை துணையிலர், அளியர், பெண்டிர் இஃதெவனோ” என்று குறுந்தொகைப் பாடலொன்றில் பா டி யி ரு க் க க் காணலாம்.

இத்தகைய இமயமலையோடு திருப்பரங்குன்றம் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. “பரங்குன்று இமயம் நிகர்க்கும்” என்று பரிபாடல் குறிப்பிடுவதனால் இமயமலை போற்றப்பட்ட அளவிற்குத் திருப்பரங் குன்றமும் அந்நாளிலேயே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே போற்றப்பட்டது என்பது தெளிவா கின்றது.

திருச்செந்தூர் திருக்கோயில் புறநானூற்றிலேயே இடம்பெற்ற திருக்கோயிலாகும். மதுரை மருதம் இளநாகனார் என்னும் புலவர் பெருமான், அத்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/27&oldid=586877" இலிருந்து மீள்விக்கப்பட்டது