பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

boring mill : (எந்.) அகழ்வு பொறி : சுழலும் மேடையுடைய ஒரு செங்குத்தான சாதனம். பல வேலைகளை ஒரு கடைசல் எந்திரத்தைவிட அதிக எளிதாக இதில் செய்து முடிக்கலாம்

boring tool : அகழ்வு சாதனம் : மரவேலைகளுக்கான ஒரு சாதனம் உலோகங்களுக்கான வெட்டு எந்திரங்களும் இதில் அடங்கும்

boron : (வேதி.) போரோன் : உலோகச் சார்பற்ற கருந் தவிட்டு நிறத் தனிப்பெர்ருள் வகை. இது மின்பகுப்பு முறை மூலம் பெறப்படுகிறது. இது சிலிக்கன் தனிமத்தை ஒத்திருக்கும். எஃகினை வலுப்படுத் துவதற்கும், கலவைப் பொருள்களில் உருக்கும் பொருளாகவும், ஆக்சைடு நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது

boron carbide : (வேதி.) போரோன் கார்பைடு : நொய்மையான கருமை நிறப்படிகத் துாள். கடினத்தில் வைரத்திற்கு நிகரானது. உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது

bort : வைரத்துண்டு : உராய்வுப் பொருளாகப் பயன்படுத்தும் வைரத்துண்டு

boss : (க.க.) குமிழ் :

(1) அலங்காரக் கவிகை மாட மையக் குமிழ் (2) ஒரு சக்கரத்தின் மையக் குடம் (3) ஒர் எத்திரத்தின் உறுப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வட்ட வடிவத் தகடு

Boston hip roof : (க.க.) இரட்டை மோட்டு இணைப்பு வாரி முகடு : மோட்டு இணைப்பு வாரி நெடுகிலும் சில்லோடுகளை அல்லது பலகைக் கற்களை நீள வாக்கில் இரட்டை வரிசையில் அமைத்தல். நீர் புகாதவாறு இணைப்புகள் இறுக்கமாக அமைக்கப்பட வேண்டும்

botany: தாவரவியல் : செடியினங்கிளின் வாழ்க்கை முறை பற்றி ஆராயும் அறிவியல்

botch : கரனை : அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு

bottled : (அச்சு.) புட்டி வடிவ அச்செழுத்து : குறைபாடான வார்ப்படம் காரணமாக அடியில் அகன்றும் உச்சியில் குறுகியும் புட்டி வடிவில் அமைந்திருக்கும் அச்செழுத்து

bottom anchored core : (வார்.) அடிநங்கூர உட்புரி : ஒரு வார்ப் படத்தில் வார்ப்படப் பொருளை ஊற்றும்போது, அது மிதக்காமல் தடுப்பதற்காக், வார்ப்படத்தின் அடியில் நங்கூரமிட்ட உட்புரி, இதனை இயன்ற அளவுக்குப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்

bottom board : (வார்.) அடித்தகடு : இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்படும்

bottom clearance : (பல்.) அடித்தட்டு இடைவெளி அக இணைப்புக்கும் பல் இணைப்புக்குமிடையிலான வேறுபாடு இதுவாகும். இது பற்சக்கரக் கொளுவிணைப்பில் பல்லிணையின் நுனிக்கும் அடிக்கு மிடையில் இடைவெளியை உண்டாக்கும்

bottom rail : (க.க.) அடிநிலை அழிக்கம்பி : ஒரு பலகணிச் சட்டத்தின் கதவிலுள்ள அடிமட்டக் கிடைநிலைக் கம்பி

bottom stake : (உலோ; வே.) அடிநிலை ஆதாரக் கம்பம் : ஒரு செங்குத்தான் ஆதாரக்கழி; இதன்