பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258


ensemble : பொதுத் தோற்றம் : ஒரு வேலைப்பாட்டின் பகுதியல்லாமல், முழுமையான மொத்தத் தோற்றம்

entablature : (க.க.) தூண் தலைப்பு : பண்டைய பாணிக் கட்டிடங்களில் ஒரு துணுக்கு மேலுள்ள தலைப்பு அமைவு

entasis of a column : தூண்மையப் புடைப்பு : ஒரு தூணின் மிகச் சிறிதளவான மையப் புடைப்பு முறை. இது உட்புழைவுத் தோற்றம் ஏற்படாமல் செய்ய உதவுகிறது

entrance switch :(மின்.) நுழைவு விசை : ஒரு கட்டிடத்திற்குள் நுழையும் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ள விசை

entropy : (இயற்.) அகவெப்பம் : வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு

enumerated : கணக்கீடு : ஒன்றன்பின் ஒன்றாக எண்ணிடுதல்; தனித்தனியே குறித்துரைத்தல்

envelope corner card : (அச்சு.) கடித உறை முகவரி : கடித உறைகளில் இடது மேல் முனையில் அச்சடிக்கப்பட்டுள்ள முகவரி

eosin : (வேதி.) சாயப் பொருள் : சிவப்பூதா நிறச்சாயப் பொருள், கரி எண்ணெயிலிருந்து எடுக்கப்படுகிறது. பருத்தி, பட்டு, கம்பளித்துணிகளுக்குச் சாயமிடுவதற்கும், சிவப்பு மை, அரக்கு ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது

epicycloid : (வடி.) வளைவரி : வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி

epoxy resins : (குழை.) இப்போக்சிப் பிசின் : இன்றியமையாத பிளாஸ்டிக்பொருள். பிஸ்பினால், எபிகுளோரோஹைட்ரின் ஆகியவை வினைபுரிவதால் தயாரிக்கப்படுகிறது. தொழில்துறையில் காப்புப் பூச்சுப் பொருட்களாகப் பயன்படுகிறது

epsom salt : (வேதி.) வெளிமக் கந்தகி : இதன் வேதியியற் பெயர் மக்னீசியம் சல்பேட் நிறமற்ற படிக உப்பு. பேதிமருந்தாகவும் , பருத்தித் துணிகளுக்கு மெருகேற்றவும் பயன்படுகிறது

equal forces : (இயற்.) சமநிலை விசைகள் : எதிர்மாறான திசைகளில் செயல்புரிந்து சமநிலையை உண்டு பண்ணும் விசைகள்

equalizer : ((மின்.) சமன்படுத்தி : குறைந்த அளவுத்தடையுள்ள மின் கம்பிகள் அல்லது சலாகைகள். இவை, இணையாக இயங்கும் கூட்டு மின்னாக்கிகள் அனைத்திலும் மின்னகம், தொடர்புலங்கள், இணைப்புலம் ஆகியவை சேரும் முனைகளை இணைக்கின்றன

equalizer brake : (தானி.எந்.) சமன்படுத்தித் தடை : உந்து வண்டியில் நெம்புகோல்களையும், சலாகைகளையும் சீரமைத்து வைத்திருக்கும் முறை. இதில், தடைமிதி கட்டையில் அல்லது தடை நெம்புகோலில் அழுத்தம் செலுத்தப்படும் போது, சலாகை வழியாக, சக்கரங்களுக்குத் தடையழுத்தம் அளிக்கும் முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சலாகைகளுக்கு அழுத்தத்தை அனுப்புவதற்கென வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்

equalizer wire : (மின்.) சமன்படுத்திக் கம்பி : சமநிலை மின்னோட்டம் பாய்கிறவாறு இணையாக இணைக்கப்பட்டுள்ள இரு கூட்டு மின்னாக்கிகளை இணைக்கும் கம்பி