பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 125

இராசியிற் புகின் உலகிற்குப் பெருந் தீங்கு விளைவிப்பான் என்பதை மகத்திற் புக்கதோர் சனி எனக் காணாய்' (தேவாரம் 7.54:9)...என்பவற்:ான் உணர்க. துரமம் புகைக் கொடி என்றும் கூறப்படும்; தூமகேது என்பதும் இதுவே: இவ் வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கரந்துறைக் கோள் நான்களுள் ஒன்று; இதன் தோற்றம் உலகிற்குப் பெருந் தீங்கு விளைக்கும் என்பர்" என்ற உரைப்பகுதி இதனை நன்கு விளக்குகின்றது.

'மிக்க வானுள் எரிதோன்றினும் குளனோடு தாட்புகையினும்" என்ற அடிசளும், ஏரி, குளமீன், தாள் என்பன வான் மீன் விசேடங்கள்; இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலக வறுமைக்கு ஏதுக்கள்” என்ற இவற்றின் உரைப் பகுதி யும் இதனை உணர்த்துகின்றன. இக் கருத்துகளையே இளங்கோ அடிகள் காவிரியின் சிறப்பைக் குறிப்பீடுமிடத்து. கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படகினும்’’’ (கரியவன்-சனி, புகைக்கொடி-வால் மீன்)

என்று குறிப்பிடுவர்.

சங்கப் புலவர்களில் ஒரு சிலர் கணியர்களாகவும் இருந்தனர். கூடலூர்க்கிழார் என்ற புலவர் ஒரு கணி. அவர் வானத்தில் ஒரு விண்மீன் தீப் பரக்கக் காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்தரம், மிருக சீரிடம் முதலிய விண்மீன்களின்

6. விண்மீன்களுள் மதம், பூரம், உத்தரத்தின் முதற்

பாகம் சிங்கி இராசிக்க உரியவை.

7. புறம்-395 அடி. (34-35) 8. சிலப்-நாடுகாண். அடி (102-03)