பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

 உலகுக்குச் சற்றுத் தொலைவிலிருக்கும்போது சற்று விரைவு குறைவாகவும் நகருவதாகத் தோன்றுகிறது. ஆகவே தோற்ற செங்கதிர் நாள்களெல்லாம் ஒரே கால அளவாக இல்லாமல் இருக்கின்றன.

ஓர் ஆண்டின் தோற்ற செங்கதிர் நாள்களின் சராசரி நேரத்தை அளவிட்டு, அதைச் சராசரி செங்கதிர் நாள் (Mean Solar day) என்று சொல்கிறோம். இதைக் கொண்டே கடிகார நேரம் வைக்கப்படுகிறது.

மார்ச்சு 21, செப்டம்பர் 23, டிசம்பர் 22, ஜூன் 21 ஆகிய நாள்களில் தோற்ற செங்கதிர் நாட் பகல் நேரமும், சராசரி செங்கதிர் பகல் நேரமும் ஒன்றாகும்; மற்ற நாள்களில் வேறுபடும்.

கடிகார காலம்

நடுப்பகல் வேளை, தீர்க்க ரேகைக்குத் தீர்க்க ரேகை வேறுபடும். அதனால் செங்கதிர் நாள் நேரம் தீர்க்க ரேகையைப் பொறுத்தது. உலகம் ஒரு முறை சுழல 24 மணி நேரம் ஆகிறது. அதனால் இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரம் 15° தீர்க்க ரேகைகளானால் கடிகார காலம் ஒரு மணி வேறுபடும். ஓர் இடத்தின் தீர்க்க ரேகைக்குச் சரியான கடிகார காலத்தை அவ்