பக்கம்:அறுந்த தந்தி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அறுந்த தந்தி

எழும்பிக் குதித்தார். பகதிராஜா மேக மண்டலத்தாடே புகுந்து புறப்பட்டார். அன்னமோ கீழே தரையில் கடந்து சென்றது.

ரிஷபதேவர் சத்தியலோகத்தின் எல்லேயை அடைந்த வுடன் rராப்தி தோன்றியது. என்றும் இல்லாதபடி அன்று ஒரே கொந்தளிப்பு. அலைகள் மலைபோல எழும்பி அடித்தன. ரிஷபதேவர் அதன் கரையிலே கின்று திரும்பிப் பார்த்தார். பகவிராஜா நெடுந்துாரத்தில் தெரிந்தார். அன் னம் கண்னுக்கே தெரியவில்லை. அவருக்கு உற்சாகம் மூண் டது. பாற்கடலை ஒரே தாண்டலாகத் தாண்டலாமா? அல்லது உள்ளே குதித்து ந்ேதலாமா? என்று யோசித் தார். முன்பெல்லாம் ஒரு கூணத்தில் தாண்டிப் போய்விடு வார். இப்போது நிமிர்த்து, அக்கரை தெரிகிறதா என்று பார்த்தார்; தெரியவில்லை. அலைகள் உயரமாக எழும்புவத குல் மறைக்கிறது போலும் என்றெண்ணித் துள்ளிக் குதித்துப் பார்த்தார். அப்போதும் கடலின் எல்லே கண் லுக்குத் தெரியவில்லை. உள்ளே குதித்துத் துளைந்து செல் வதுதான் வழியென்று எண்ணித் காவினர். தரைமேல் நடந்து வந்தது போலச் சுலபமாகப் படவில்லை.

அவர் உள்ளத்தில் அப்போதுதான், இது விளையாட் டல்ல, வினே' என்ற உண்மை புலப்பட்டது. ஒரு சிறு குழிபோல இருந்த இந்தக் கடல் இவ்வளவு பெரிதாகி விட்டதே! எப்படி?’ என்று யோசித்துப் பார்த்தார். விஷ யம் விளங்கியது. நம்மிடத்தில் இறைவன் கருணையாகிய பலம் இருக்கது. அதனல் பெரியவகை இருந்தோம். இப் போது அந்தத் தெய்வ பலம் போய்விட்டது போலும்!இப்படி எண்ணுகையிலேயே கால் தளர்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பாற்கடலின் அலைகள் பேய் அறை வது போல அறைந்தன. முகத்தை மேலே தூக்கிக்கொண் டார். மூக்குக்குள்ளெல்லாம் பால் புகுந்தது. மூச்சு விட முடியவில்லை. வாயைத் திறந்து பெருமூச்சு விட்டார். முன் னங்காலால் அடித்துத் துழாவி நீந்தினர். பளிர் பளிர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/109&oldid=535348" இலிருந்து மீள்விக்கப்பட்டது