பக்கம்:அறுந்த தந்தி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி li3

பார்வதியின் குழந்தையாகிய நாலு வயசுள்ள ஜய ராமன் இந்த இரண்டு குடும்பத்துக்கும் சொக்தமான வனைப்போல வளர்ந்தான். குழந்தைகளைக் கண்டாலே ராமசாமி ஐயருக்குப் பிரியம். அவருக்கு மேலே ஜானகிக் கும் விருப்பம். ஜயராமனும் அவர்களிடம் சகஜமாகப் பழகினன். அடிக்காமல் வையாமல் கல்ல தின்பண்டங் களைக் கொடுத்தும் விளையாட்டுக் காட்டியும் அந்த எழைக் குடும்பத்தாரே ஜயராமனே வளர்த்தார்கள் என்று சொல்லிவிடலாம்.

பரமேசுவரையர் ஒரு பி. ஏ., எல். டி ; சாது ; உல கப் பழக்கம் உடையவர். தம்முடைய குழந்தையை இவ்வளவு அன்போடு பாதுகாக்கிருர்களே என்று அந்த ஏழைகளிடத்தில் வியப்பும் மதிப்பும் அவருக்கு உண் டாயின. குழந்தையைப்பற்றிய கவலை அவருக்குச் சிறிதும் இல்லாமல் போயிற்று. பார்வதிக்கு முதலில் விகற்பமாக ஒன்றும் படவில்லை. அன்று ஒரு நாள் யாரோ சொந்தக் காரப் பாட்டி ஒருத்தி அவளைப் பார்க்க வந்திருந்தாள் ; யோக சேஆமம் விசாரித்தாள். 'இந்த வீட்டில் எத்தனே குடித்தனம் ?’ என்று கேட்டாள்.

'நானும் ஜானகியும் குடியிருக்கிருேம்.” 'அது யார், ஜானகி ?? . 'அதோ முன் கட்டில் குடியிருக்கிருளே; அவள் தான்.” -

உன் குழந்தையை வைத்துக்கொண் டிருக்கிருளே, அந்தப் பெண்ணு?” -

"ஆமாம், அவள்தான். ஜயராமனுக்கு அவள்தான் அம்மா. சகா அவர்கள் வீடே கதி. சாப்பாடுகூடப் பாதி நாள் அங்கேதான்.”

அப்படியா? அவள் அகமுடையானுக்கு எங்கே வேஆ ??? •, -

"என்னவோ பாவம், ஒட்டல் வேலை செய்கிரு.ர்.'

அறு. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/120&oldid=535359" இலிருந்து மீள்விக்கப்பட்டது