பக்கம்:அறுந்த தந்தி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அறுந்த தந்தி

'ஒகோ, அவன் வீட்டிலேயும் ஒரு குழந்தை இருக்கிறதாக்கும்! ஜிலேபி, கிலேபி இல்லையா? இாண்டு நாளைக்குக் கொண்டுபோய்க் கொடுத்து ஏமாற்றியிருப் பான். கடைக்குச் சொத்தக்காரன் சொத்துத்தானே? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைக் கிற வியாபாாந்தானே இது ??? -

ராமசாமி ஐயரைப்பற்றி அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண் டிருக்க அவரால் முடிய வில்லை. 'சட்! வாயை மூடு உளருதே. வாயை அலம்பிக் கொள். நல்ல மனிதர்களைப்பற்றி நல்லது சொல்லத் தெரியாவிட்டாலும் மெளனமாக இருப்பதே நல்லது. சாதுக்கள் மேல் பழி சொன்னுல் தெய்வத்துக்குச் சகிக் காது?’ என்று சொல்லி வெளியே போய்விட்டார். மேலே சம்பாஷணையை வளர்த்த அவருக்கு மனம் இல்லை.

3

பரமேசுவரையர் வேறு வீட்டுக்குக் குடி போவ தென்று தீர்மானித்தார். பார்வதி தினக்கோறும் அவரைத் துளைத்து வந்தாள். அதற்காக அவர் பயப்படவில்லை. ஒவ் வொரு நாளும் வீட்டில் அநாவசியமான சச்சரவும், அங்க ஏழைகள் எவ்வளவு அடங்கிப் போனுலும் அவள் விண் சண்டைக்கு இழுப்பதுமாக இருந்தது. இது அவருக்குப் பிடிக்கவில்லை. வேறு வீட்டுக்குப் போய்விட்டால் அவர் களுக்கு இந்தத் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று எண்ணினர்.

விடு சுலபமாகக் கிடைக்கிறதா? முதலில் தாம் வேறு விடு பார்ப்பதை அவர் ராமசாமி ஐயரிடம் சொல்லவில்லை. ஒரு நாள் கடைவீதியில் கண்டபோது சொன்னுர். ராம சாமி ஐயருக்கு என்னவோ ஒருவிதமான வேதனை உண்டா யிற்று. ஜயராமனைப் பிரிந்திருப்பதை அவர் சகிக்கமுடி யாது. அவர் அந்தக் குழந்தையிடம் ஒப்பு உயர்வில்லாத அன்பை வைத்திருந்தார். x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/123&oldid=535362" இலிருந்து மீள்விக்கப்பட்டது