பக்கம்:அறுந்த தந்தி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 129

யைப் பார்க்கும்பொழுது அவனுக்கே வேடிக்கையாக இருக் - தது. அவன் அவளுடைய பிள்றையென்ற சொல்லும்படி இருந்தான். அவள் மனேவி, தான் புருஷன் என்ற உறவு அவர்களிடையே இருக்க கியாயம் ஏது *

அவன் மீண்டும் பதினெட்டுப் பிராயமுடைய ஒருக் தியை மணம் செய்துகொண்டான். பழைய குடும்பம் ஒன்று தனியே இருக்க, புதுக் குடும்பத்தை ஆரம்பித்தான், புதிய மோகத்தில் ஆழ்ந்து புதிய மனவியிடம் இன்பம் துய்த்தான். .

முதல் மனைவி இறந்து போனுள். அதனல் அவனுக் குக் கொஞ்ச நாள் தக்கம் இருந்தது. புதிய மனேவியின் போகத்திலே அவனுக்கு ஆறுதல் கிடைத்தது. அவளையே தன் உயிராக மதித்தான். அவளிடம் , பிறந்த குழந்தை களைத் தன் கண்மணிகளைப்போல் பாவித்தான். இப்படி இரண்டாவது குடும்ப விருத்தி நடைபெறுகையில் முதற் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மாணம் அடைந்தனர்.

4.

மரண தேவன் இப்போது சிரஞ்சீவி மனிதனது இரண்டாம் குடும்பத்தை அனுகினன். அவனுக்கு நூறு வயசு, ஆல்ை, என்ன? அவன் இப்போதுதான் முப்பத் தைந்து வயசு நிறைந்தவனேப் போலக் காணப்பட்டான். அவனுடைய ஆருயிர்க் காதலியாகிய இரண்டாவது மனேவி யும் இறந்துபோளுள். முதல் மனேவி இறந்தபோது அவ லுக்கு இவ்வளவு துக்கம் உண்டாகவில்லை. இப்போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் உண்மை புலப்படலாயிற்று. ஒரு நூறு வருஷம் தான் வாழ்ந்த பயன் தன் அன்புக்குரிய பொருளை இழந்துவிடும் அக்கந்தான் என்ற உண்மையை அவன் செஞ்சு உணரத் தொடங்கியது. -

ஆனலும், அவன் மனம் தளாவில்லை. மூன்ருவது மனேவியைத் தேடினன். இப்போது உலகம் அவனிடம் முன்னேப்போல் அவ்வளவு மரியாதை காட்டவில்லை.

•зилх. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/136&oldid=535375" இலிருந்து மீள்விக்கப்பட்டது