பக்கம்:அறுந்த தந்தி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலப் பந்து 147

காமல் இருக்கவேனும்; அன்று மாணிக்கம் பந்து கேட்க வேனும் ; பிடித்தது சனியன் அவனுக்கு. கையிலே எது இருந்தாலும் பிரயோகித்து விடுவார். சாமி, இந்தப் பிள்ளை யை இந்தப் பாவி வவுத்திலே ஏன் பொறப்பிச்சே? இந்தக் கண்ாாவியைப் பார்க்காமெ என் னேக் கொண்டு ப்ோயிட மாட்டியா?’ என்று வயிறெரிந்து மாணிக்கத்தின் தாய் புலம்பும்படியாக முதலியாரின் தண் டனேயின் கடுமை இருக்கும்.

குழந்தைப் பிள்ளை ; அவனுக்கு முதல் நாள் பட்ட அடியும் வாங்கின வசவும் அன்று ராத்திரித் துளக்கத் தோடே போய்விடும். மறுநாள் மறுபடியும் பங்தைப் பற்றி அம்மாவிடம் முணுமுணுப்பான். அதை அவன் மறந்தாலும் அவன் தோழர்கள் மறக்க விடுகிருர்களா? வீதியிலே விளையாடப் போனுல் அடுத்த விட்டு வேலன், 'இதோ எங்க மாமா இந்தப் பங்தை வாங்கித் தங்தாங்க” என்று குதித்துக்கொண்டே வருகிருன். தங்கமணியின் தகப்பளுர் உத்தியோகஸ்தர் அல்ல் , கூலி வேலை செய்கிற வர். ஆனலும் அவனுக்கு ஒரு சின்னப் பங்தையாவது வாங்கிக்கொண்டு வந்து தந்திருக்கிரு.ர். கோலி, பம்பாம், ஊதல், பலூன், மோட்டார், ரெயில் இன்னும் என்ன என்னவோ விளையாட்டுச் சாமான்கள் விதியிலே வருகின் றன; விற்க அல்ல; ஒவ்வொருத்தனும் விளையாட வரும் போது தன் வீட்டிலே வாங்கித் தந்திருக்கும் பண்டத் தைக் காட்டி ஜம்பமாகப் பேசிக்கொள்கிருன். அவ்வளவு பேருக்கு நடுவில் இரண்டு மாக்கோலியும் இரண்டு பொக் கைக் கண்ணுடிக் கோலியுமே தன் சொத்தாக வைத்திருக் கும் மாணிக்கத்துக்கு அழுகை வராமல் என்ன செய்யும்? 'உனக்கு உங்க அப்பா ஒண்னும் வாங்கித் தாமாட் டாங்களா?' என்று வேலன் கேட்கும்போது, ஏழு வய சுக் குழந்தை எப்படிப் பதிலளிப்பான்?

"எங்கம்மா சொன் இறங்க; அவுங்க அப்பா காசு செலவழிக்க மாட்டாராம்!' என்று தங்கமணி வீட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/154&oldid=535393" இலிருந்து மீள்விக்கப்பட்டது