பக்கம்:அறுந்த தந்தி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 w: அறுந்த தந்தி

கத்திரிச்செடி கன்ருகத் தழைத்து வளர்ந்து பூ விட் டது. பூ உதிர்ந்து கடுகளவு பிஞ்சாக இருந்தது. 'இன் னும் ஒரு வாாத்துக்குள் கத்திரிப் பிஞ்சைக் காணலாம், பறிக்கலாம், கறி சமைக்கலாம்' என்று போக் குழந்தை ஜபம் பண்ணுத வேளை பார்த்துப் பாட்டியின் காதில் ஒதி வர்தான். -

கத்திரிக்காய் காய்ப்பதற்கு முன்பே யமதர்மராஜனே பாட்டியைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான். மகா சிவபக் தையாகிய பாட்டியை அழைத்துப்போகக் காலது தர்களை ஏவக்கூடாதென்று எண்ணி அவனே நேரில் ஒரு நாள் இரவு வந்து சேர்ந்தான். பாட்டியின் ஜபம் பவித்தது. அதாவது யமதர்மராஜாவை அவள் தன் கண்ணுல் பார்க் கும் சக்தியை அடைந்தாள். அவன் வந்து கின்றதைப் பார்த்த பாட்டிக்கு மனசுக்குள் கொஞ்சம் அச்சம் உண் டாயிற்று. எத்தனையோ கடுமையான நாக தண்டனைகளைப் பற்றியும், யமகிங்கரர்களைப் பற்றியும் கதை சொல்லிச் சொல்லி அவர்களைப்பற்றிய பயம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆகவே அவள் ஒரு கணம் திகைத்தா லும் மறுகணம் சிவகாமத்தை உச்சரித்துக்கொண்டே தைரியத்தை அடைந்தாள்.

வாாாய் யமதர்மராஜனே!’ என்ற குரலேக் கேட்டுக் கூற்றுவன் திடுக்கிட்டான். பூவுலகத்தில் உள்ளவர்களின் ஊனக் கண்களுக்கு அவனைப் பார்க்கும் சக்தி ஏது? சாவித் திரிக்கு மாத்திரம் அந்த ஆற்றல் இருந்தது. சாவித்திரி யின் ஞாபகம் யமதர்மாாஜனுக்கு வந்தவுடன் உடல் குலுங்கியது. அந்தப் பெண் என்னேத் தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டாள். உலகம் உள்ளளவும் என் அறியாமை யையும் தன்னுடைய சாமர்த்தியத்தையும் நிலவும்படி செய்துவிட்டாள்' என்று எண்ணும்போதுதான் யமதர்ம லுக்குத் தன்னேக்காட்டிலும் பெரியவர்கள் பூலோகத்தில் வாழும் மனுஷ ஜாதியிலும் இருக்கிருர்கள் என்ற ஞாபகம் வநதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/163&oldid=535402" இலிருந்து மீள்விக்கப்பட்டது