பக்கம்:அறுந்த தந்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 57

அடையும் ஆனக்கம் இருக்கட்டும்; அவனுக்கே அலாதி யான திருப்தி. அவன் மனசு அப்படி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் ?

ஒரு நாள் தன் சிநேகிதர்களின் அலேக்கழிப்புத் தாங்காமல் அவன் சொன்ன பதில் துாரத்தில் இருந்தபடியே கேட்டுக்கொண் டிருந்த வாத்தியார் ஒருவருடைய மனசை உலுக்கிவிட்டது. 'எனக்கு அம்மா இல்லை. அம்மாவை கான் பார்த்ததே இல்லை. செத்துப்போனவர்கள் மறுபடி யும் பிறந்து, யாரிடம் பாசம் வைத்திருக்கிருர்களோ அவரிடம் வருவார்கள் என்று சொல்கிருர்களே; அப்படி இந்தப் பிச்சைக்காரியும் வந்திருக்கிருள் என்று கினைக்கி றேன்' என்ருன். இது அவன் ஏதோ காரணம் சொல்வ தற்காகச் சொன்னது. அவனுக்குப் பத்து வயசு, அம்மா செத்துப்போய் ஒன்பதரை வருஷங்களே ஆயின. அதற் குள் அவள் பிறந்து இத்தனே வயசுள்ள பிச்சைக்காரி ஆகி விட்டாளா? ஆக முடியுமா? இந்த கியாயங்களை யெல்லாம் அவன் யோசிக்கவில்லை. என்னவோ சொல்லி வைத்தான். ஆளுல் அதனூடே உண்மை இல்லாமல் போகவில்லை. தாய் என்று ஒருவரிடத்தில் அன்பு வைக்கும் பாக்கியம் அவனுக்கு இல்லை. அது அவனுக்குக் குறையாகவே இருந்தது. சாக்ஷாத் தாயினிடம் வைக்கும் பிரியத்தை அப்படியே மற்ருேர் இடத்தில் வைத்ததாகச் சொல்ல முடியாது. ஆணுலும் அந்தக் குறையை கிரப்பிக் கொள்ள அவன் உள்ளம் ஏங்கிக் கிடந்தது. பிச்சைக்காரி யிடம் காட்டும் இரக்கம் - அன்பு - அதற்கு ஈடுசெய்ய வந்தது போலும்!

இது எப்படியாக இருந்தாலும் அவனுக்கு அவளி டத்திலே, உருவத்தையும் கிலேயையும் தரித்திரத்தையும் அவலகAணத்தையும் எலும்பையும் கோலேயும் கடந்து கிற்கும் ஒர் அன்பு - கருணை யென்ற சொல்லுங்கள், தர்ம புத்தியென்று சொல்லுங்கள், ஈாமென்று சொல்லுங்கள் - ஒர் உயர்ந்த உணர்ச்சி ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/64&oldid=535305" இலிருந்து மீள்விக்கப்பட்டது