பக்கம்:அறுந்த தந்தி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 59

வாங்கித் தின்கிறதில்லை; அவளுக்குக் கொடுத்து விடுகி றேன்' என்ற உண்மையைக் கக்கினன்.

'நீ தின் மைல் அவளுக்கு யார் கொடுக்கச் சொல்

கிருக்கள்? பட்டினி கிடந்து உனக்கு உடம்புக்கு வந்தால் என்ன செய்கிறது? டாக்டருக்கு வேறு பணம் கொடுக்க வேண்டி வரும். முட்டாள்' என்று கண்டித்தார். அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

தர்மம் கடந்துகொண்டுதான் இருந்தது. கிருஷ்ண மூர்த்தி ஐயர் தாம் கொடுப்பதைக் குறைத்துக் கொண் டார். எது கொடுத்தாரோ அதை அப்படியே பிச்சைக் காரிக்குக் கொடுத்துவிடுவான். 'முன்போல உனக்குக் கொடுக்க முடியவில்லை. எனக்கே காசு கிடைக்கிறதில்ல்ை” என்று அவன் அழாக் குறையாகச் சொல்வான். கொடுக் கிறது போதும் சாமி; எனக்கு எது கிடைக்குமோ அது தான் கிடைக்கும்.’’ என்று அவள் ஆறுதல் தொனியோடு பேசு வாள்.

கொஞ்ச நஞ்சம் காசு கொடுப்பதையும் அவன் தகப் பஞர் கிறுத்திக்கொண்டார். புத்தகம், சம்பளம், கோட்டு எல்லாவற்றுக்கும் ரசீது வாங்கிக்கொள்வார். மிச்சம்

பிடிக்க வசதியில்லை.

அவன் என்ன செய்வான் ! அவளுக்கு நாலு நாளாக ஒன்றும் கொடுக்கவில்லை. யாரோ ஒரு சிநேகிதனிடம் எட்டணுக் கடன் வாங்கி, ஒவ்வோாணுவாகக் கொடுத்து வங்தான். எட்டன எத்தனே நாளுக்கு வரும்? பிச்சைக் காரி கிடைத்ததை வாங்கிக்கொண்டாள். அவள் அதிகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன்தான் கவலைப் பட்டான். நாளைக்கு வேண்டுமே என்ற விசாரம் அவளுக்கு இல்லை; ஆனால் அவளுக்காக அவன் விசாரப்பட் L డr

கடன் வாங்கின தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். இது ஒன்று. இாண்டாவது, மேற்கொண்டு அவளுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/66&oldid=535307" இலிருந்து மீள்விக்கப்பட்டது