பக்கம்:அறுந்த தந்தி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் புடைவை

(ತ್ರ : பழனியப்ப முதலியார் புதுப் பணக்காரர். இளமையில் அவர் ஏழையாகத்தான் இருந்தார். முதலில் கூலிக்கு நெசவு வேலை செய்து வந்தவர் பிறகு தாமே கறி போட்டார். கல்யாணம் செய்துகொண்ட் பிறகு இரண்டு தறி போட்டு நூல் புடைவைகள் கெய்து வியாபாரம் செய்து வந்தார்.

இப்போது கிட்டத்தட்ட ஒரு லகாாம் சேர்த்திருக் கிருரென்று சொல்லிக்கொள்கிருர்கள். இப்போது இருநூற் றுக்கு மேற்பட்ட கறிகள் ஒடுகின்றன. சிறுகச் சிறுக ஆரம் பித்த புடைவை வியாபாரம் பெருகி விரிந்துவிட்டது. சென் னேயில் அவர் இப்போதுதான் ஒரு கடையை ஏற்படுத்தி யிருக்கிரு.ர்.

கிழவர்கள் சிலர் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிருர்கள். 'தெய்வபக்தி என்பது லவலேசமும் இல்லா தவன், இப்போது கோயிலென்ன குளங்களென்ன இவை களைக் கட்டுவதும் அபிஷேக ஆராதனை செய்வதுமாகக் கணக்கு வழக்கில்லாமல் செலவழிக்கிருன். அந்தக் காலத் தில் காலணுக் காசுகூடச் செலவழிக்க மனமில்லாதவன் இப்போது ஆயிரக்கணக்கில் தானதர்மம் பண்ணுகிருன். மனிதன் மாறுகிருனு, ஸ்வாமி மாற்றுகிருரா? தெரியவில்லை’ GTG3f f f if fiTeSSIT »

பழனியப்ப முதலியார் செய்துவரும் நல்ல காரியங் களில் மிகவும் முக்கியமானது, விசேஷமானது, தீபாவளிப் புடைவை உற்சவம். அந்த ஊர்க் கோவிலில் என்றும் எங் கும் இல்லாத திருவிழாவாக அது நடைபெறும். ஏழை எளியவர்களுக்குச் சாப்பாடு, பிராம்மண போஜனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/87&oldid=535326" இலிருந்து மீள்விக்கப்பட்டது