உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலிபாபாவும் 40 திருடர்களும்

பாடல்கள்

மார்ஜியானா

அழகான பொண்ணு நான்
      அதுக்கேத்த கண்ணுதான்,
எங்கிட்ட இருப்ப தெல்லாம்
      தன் மானம் ஒண்ணுதான்

(அழகான)


ஈடில்லா காட்டு ரோஜா
      இதெ நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா
      குணமே தான் மாறுங்க
      முள்ளே தான் குத்துங்க.


ஓ...... அங்கொண்ணு இளிக்குது !
      ஆந்தைப் போல் முழிக்குது !
ஆட்டத்தை ரகிக்க வில்லே !
      ஆளைத்தான் ரசிக்குது !

(அழகான)


இங்கொண்ணு என்னைப் பாத்து
      கண் ஜாடை பண்ணுது !
ஏமாளிப் பொண்ணு யிண்ணு !
      ஏதேதோ எண்ணுது !
      ஏதேதோ எண்ணுது !

(அழகான)


ஓ...... பெண்சாதியெ தவிக்க விட்டு
பேயாட்டம் ஆடுது.
      பித்தாகி என்னெச் சுத்தி
      கைத் தாளம் போடுது

(அழகான)


தௌலத் புல்புல் டூயட்

தெளலத்:- சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே!
என் சீனா கற்கண்டே !