பக்கம்:அலிபாபா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அலிபாபா


வாயில்லாப் பிராணிகளாகிய இவை நீண்டநேரமாக எண்ணெய் தாழிகளைச் சுமந்து கொண்டிருப்பதால், பாரத்தை இறக்கி, அவைகளுக்குச் சற்றே ஓய்வு கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவனுடைய குரலை அலிபாபா முன்பு வனத்தில் மரத்தில் ஒளிந்திருக்கையில் கேட்டிருந்தும், அவன் அப்பொழுது மாறுவேடம் புனைந்து வந்திருந்ததால், அக்குரல், திருடர் தலைவனின் குரல் என்பதைக் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஒரு வியாபாரிதான் என்று நம்பி, அலிபாபா அவனை வரவேற்று, இரவிலே தன்வீட்டில் தங்கியிருக்க அனுமதியளித்தான். வீட்டின் பக்கத்தில் காலியாயிருந்த ஓர் ஒலைக் கொட்டகையைக் காட்டி, அதிலே கழுதைகளை நிறுத்தி வைக்கலாம் என்று அவன் கூறினான். பின்னர், ஓர் அடிமைப் பையனை அழைத்து, கழுதையின் உணவுக்குத் தேவையான காணம் முதலியவற்றையும் தண்ணிரையும் கொட்டகையில் கொண்டு வைப்பதற்கும் அவன் ஏற்பாடு செய்தான். அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த மார்கியானாவிடம், “இன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். அவருக்கு விரைவிலே சாப்பாடு தயாராகட்டும்! அத்துடன், அவர் படுப்பதற்கு மாடியில் ஓர் அறையில் படுக்கையை எடுத்துப் போட்டுவை!” என்று அவன் உத்தரவிட்டான்.

திருடர் தலைவன், கழுதைகளைக் கொட்டகையில் கொண்டுபோய் நிறுத்தி, தாழிகளை அவிழ்த்துக் கீழே வைத்தான். பிறகு, கழுதைகளுக்குத் தீனி வைத்து, தண்ணி காட்டிவிட்டு, அவன் முன்வாயிலுக்குச் சென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/46&oldid=512496" இலிருந்து மீள்விக்கப்பட்டது