பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

கொண்டிருந்தான். இவ்வாறு வரலாற்று முறையில் இந்திய நாட்டின் முதல் பேரரசராக அமர்ந்தவர் சந்திரகுப்தரே யாவர்.

தலைநகரான பாடலியில் இருந்துகொண்டு அந்தப் பேரரசை ஆள்வதற்குரிய திட்டங்களை அவரும் சாணக்கியரும் சேர்ந்து உருவாக்கி நிறைவேற்றினார்கள். பேரரசு நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பெற்று, மூன்று மாநிலங்கள் சக்கரவர்த்தியின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்தன. இந்தப் பிரதிநிதிகள் யாவரும் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாநிலம் பேரரசர் நேரிடையான ஆட்சியில் இருந்தது. வடமேற்கு மாநிலத்திற்குத் தட்சசீலநகரும், மேற்கு மாநிலத்திற்கு உச்சயினி நகரும், தெற்கு மாநலத்திற்குக் கிர்னார் நகரும் தலைநகர்களாக விளங்கின. இமயம் முதல் தமிழகம் வரையிலும், மேலைக் கடலிலிருந்து கீழைக் கடல்வரையிலும் பரவியிருந்த அந்தப் பேரரசில் பாடலிபுத்திரத்திலிருந்து பேரரசரின் அனுப்பிய ஆணைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப்பட்டன. இன்றியமையாத நிகழ்ச்சிகள் யாவும் எல்லா இடங்களிலிருந்தும் அவருக்குச் செய்திகளாக வங்து கொண்டேயிருந்தன. அரசாங்க அதிகாரிகள் அனைவரும், அச்சத்துடனும் பக்தியுடனும், தத்தம் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். நாடெங்கும் ஒற்றர்கள், மக்களும் அதிகாரிகளும் அவரவர் கடமைகளை நிறைவேற்றி வருவதுபற்றி உளவறிந்து தெரிவித்து வந்தனர். உட்பகைகள் ஒடுக்கப்பெற்றன. நால்வகைப் படைகளும் பெருக்கப்பட்டன.