பக்கம்:அழகர் கோயில்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 127 திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் வழக்கிழந்து போனபோது. வைணவ ஆசாரியரான நாதமுனிகள் நம்மாழ்வாரின் பிறப்பிடமான ஆழ்வார் திருநகரி சென்று அவற்றைத் தொருந்தார். மீண்டும் அவை வழக்கிழத்து போகாது காப்பதற்காகத் தமிழ்நாட்டு வைணவக் கோயில்களில் இந்திருவிழா ஏற்பட்டிருக்கலாம். ஆழ்வார்களின் பாசுரங்களை மனப்பாடமாக ஆக்கிக்கொள்ளதற்கு வைணவர்களுக்கு இத்திருவிழா ஒரு வாய்ப்பாக அமைகிறது. இன்றும் வைணவக் கோயில்களில் திவ்வியபிரபந்தம் பாடுவோர்கள் பாசுரங்கள் அனைத் தையும் மனப்பாடமாகவே ஓதுவதைக் காணலாம். நாலாயிரத் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் அனைத்தும் நாதமுனிகள் காலம் நொடங்கி இந்த நூற்றாண்டுவரை அழியாது காக்கப்பட்டத்தில் வைணவக் கோயில்களில் நடைபெறும் இந்திருவிழாவிற்குப் பெரும் பங்குண்டு. 6.4.12. கணு உற்சவம்: தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நடைபெறும் திருவிழா இது. ஏனைய திருவிழாக்கள் இறை வனுக்காக நடத்தப்பெறுபவை. இத்திருவிழா மட்டும் இறைவிக்காக (பிராட்டிக்காக) இத்நாளில் வைணவக் கோயில்களில் நடைபெறும். பிராட்டி மஞ்சட்கிழங்கு, குங்குமம் செஞ்சாந்து உள்ளிட்ட பொருட் களைத் தன் பிறந்த வீட்டிலிருந்து இந்நாளில் சீதனமாகப் பெறு கிறாள் என்பது வைணவர்களின் நம்பிக்கை. வைணவக் கோயில்களில் இத்திருவிழா நாளில் பிராட்டியை மட்டும் கோயிலுக்குள் எழுந்தருளச் செய்வர். அழகர்கோயிலிலும் பிராட்டியை மட்டும் எழுந்தருளச் செய்து, மலைப்பாதையில் நாரா யணராயர் தெப்பக்குளத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். அப்போது பிராட்டிக்குச் 'சித்ரான்னம்' எனப்படும் பல வகைச் சாதங்கள் படைக்கப்படும். 6.4.13. தைலப் பிரதிஷ்டை: இத்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. முன் றாண்டுகளுக்கொருமுறை தை அமாவாசை நாளில் நிறைவுறும்படி இத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். இக்கோயில் இறைவனின் மூலத்திருமேனி முழுவதும் கல்லால் ஆன திருமேனி அன்று. கல்லில் வரிவடிவமாகச் (rough cur) செதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/134&oldid=1467999" இலிருந்து மீள்விக்கப்பட்டது