பக்கம்:அழகர் கோயில்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 அழகர்கோயில் ஆனால் இத்திருக்கண்ணுக்கு அழகர் பல்லக்கு வருவதில்லை. வைகை வடகரையில் ஒரு மண்டபத்தில் அழகர் பல்லக்கு இருக்க (இறைவனின் திருவடியாகக் கருதப்பெறும்) 'சடாரி'யினை மட்டும் ஒரு சிறிய பல்லக்கில் இந்திருக்கண்ணுக்கு எடுத்துவந்து பூசை செய்து, திரும்பவும் கொண்டுசெல்கின்றனர். கோயில் பிராமணப் பணி யாளர்க்கோ, ஏனையோருக்கோ, 'இதுநான் வழக்கம்' என்பதைத் தவிர இதற்கான தனிக்காரணம் எதனையும் சொல்லமுடியவில்லை. அழகர் ஊர்வலம் மதுரை நகருக்குள் வரக்கூடாது எனத் தடுக்கப் பட்டது என்ற எண்ணத்தை இந்நிகழ்ச்சி வலுப்படுத்துகிறது. திரு மாலுக்குப் பதிலாகத் திருவடிநிலைகளை எடுத்துச்செல்வது சமூகத் தில் தொன்றுதொட்டு வழங்கிவருகின்ற ஒரு மரபாகும். இராமன் வரமுடியாத இடத்தில் அவன் திருவடிகளைப் பரதன் கொண்டு சென்ற இராமாயணக் கதைநிகழ்ச்சி இதனைத் தெளிவாக எடுத் துக்காட்டும். எனவே' மதுரை நகருக்குள் அழகர் செல்லமுடியாத காரணத்தால்தான் அவரது திருவடியாகிய 'சடாரி' மட்டும் அங்கு எடுத்துச் செல்லப்பட்டதோ என்றெண்ணத் தோன்றுகிறது. அழகர்கோயிலிலிருந்து கள்ளர் வேடம் புனைந்து வருகின்ற அழகர், தல்லாகுளம் பெருமாள்கோயிலில் கள்ளர் வேடத்தைக் களைந்து, பெருந்தெய்வக்கோலம் பூணுகிறார். வைகையாற்றிலும் வண்டியூரிலும் திருவிழா நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் மீண்டும் தல்லாகுளத்தில்தான் கருப்பசாமி கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் கள்ளர் வேடம் புனைகிறார். வைகை யாற்றுப் பகுதியிலும் வண்டியூரிலும் மூன்று பகற்பொழுதுகளையும் இரண்டு இரவுப்பொழுதுகளையும் கழித்தாலும், அழகர் இப்பகுதி களில் கள்ளர் வேடம் புனைவதில்லை. இதற்கான காரணத்தையும் ஆய்ந்துணர வேண்டும். வேறு தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத நிலை யில், அழகரைப் பாண்டிமுளி மறித்த கதை, கத்தியுடன் கூடிய காவல்தெய்வமான அனுமார், துருத்திநீர் தெளிப்போரின் ஆடை, போர்வீரனைப்போலத் தோற்றம். அடியவர்கள் அழகருக்கும் மீனாட்சிக்கும் எல்லை வரையறை செய்யப்பட்டதாகக் கூறுவது, மதுரை நகர்ப்பகுதிக்கு அழகரின் திருமேனி வருவது தடுக்கப்பட்டுத் திருவடி நிலையினைக் கொண்டுசெல்வது ஆகிய அனைத்துக்கும் ஊகமாக அளிக்கக்கூடிய விடை இதுவே :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/167&oldid=1468038" இலிருந்து மீள்விக்கப்பட்டது