பக்கம்:அழகர் கோயில்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176 அழகர்கோயில் அமரபட்சம், இடப லக்கனம் முதலிய துல்லியமான செய்தி களைக் குறைந்த கல்வியறிவே பெற்று, ஓசை வரம்பையே யாப்பு வரம்பாகக் கொண்ட வர்ணிப்பு ஆசிரியர்கள் பாகவத அம்மாளை யிலிருந்தே பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. 3. கண்ணன் அரக்கியான பூதனையிடம் பால்குடித்து அவளை மடிந்து வீழச் செய்கிறான். மடிந்து வீழ்ந்த அவளுடலை ஆய்ப்பாடி மக்கள் எடுத்து எரியூட்டுகின்றனர். இந்நிகழ்ச்சியைப் பாடும் செவ்வைச்சூடுவார், தம் பாகவதத்தில் தம் கற்பனையில் ஒரு செய்தினைக் கூறுகின்றார். கண்ணன் வாய்வைத்து முலையருந் திய காரணத்தால் பூதனையின் உடல் எரிகின்றபோது மணம் வந்த தாம். "மேதகு கடற்பவளம் வென்றுமிளிர் செவ்வாய் ஆதிகதிர் மாமுலை யருந்திய திறத்தால் பூதனை யுடற்சுடு புகைப்படல மண்டிக் காதமொரு நான்குவிளை காரகில் கமழ்ந்த 22 இச்செய்தியினைப் பாகவத அம்மானை, "உம்பர்தமக் கன்றமுர்த முண்ணவருள் கண்ண னங்கே செம்பவள வாய்திறந்து செய்யமுலை யுண்ட தனால் பூதனையாள் தேகப் புகைதான் கமகமெனக் காதமொரு நான்குங் கமழுமகில் மாமணமே*23 எனப் பாடுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு இச்செய்தியினை, "பூதனை தன் பேருடலை செந்தணலை மூட்டிப் பொசுக்கலுற்றா ராயரெல்லாம் நாதன் வாய் வைத்ததனால் நான்கு காதமட்டும் நற்களபந்தான் மணக்க**24 எனப் பாடுகின்றது. செவ்வைச்சூடுவாரின் பகவதம், பாகவத அம்மானை வழியாக. வர்ணிப்பு ஆசிரியர்களிடம் தன் செல்வாக்கினைப் பதித்திருப்பதற்கு இப்பகுதி எடுத்துக்காட்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/183&oldid=1468056" இலிருந்து மீள்விக்கப்பட்டது