உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகர் கோயில்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

194 அழகர்கோயில் பதினெட்டு விழுக்காட்டினர் (18%) நேர்த்திக்கடனாக வேடமிட்டு வருவதாகத் தெரிவித்தனர். மொத்தத்தில் பதினைந்து விழுக்காட்டினர் (15%) ஆண் டாரிடம் அககினி முத்திரை பெற்றுள்ளனர். இருபத்திரண்டு(22%) விழுக்காட்டினர் பூ முத்திரை பெற்றுவருகின்றனர்; ஏனையோர் முத்திரை பெறுவறில்லை. மீட்டு இக்கோயிலோடு பெரிதும் தொடர்புடைய ‘அம்பலம்' எனும் சாதிப்பட்டமுடைய மேல நாட்டுக்கள்ளர் சாதியினர் வேட வழிபடுவோரில் ஒரு விழுக்காட்டினராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. அரிசனர் (பள்ளர், பறையர்) அல்லாத தாழ்த் தப்பட்ட சாதியினரில் சந்தனக்குறவர் மூன்று விழுக்காட்டினரா கவும் (3%) சக்கிலியர் மூன்று விழுக்காட்டினராகவும் (3%) இருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஆடை: திரியெடுத்தாடுவோரும், திரியின்றியாடுவோரும், சாட்டை யடித்தாடுவோரும் சிவப்புநிற அரைக்காற்சட்டை அணிந்துள்ளனர். திரியெடுத்தாடுவோர் மட்டும் தலையில் சிவப்பு நிறத்தில் 'லேஞ்சி' எனப்படும் சிறிய துணி ஒன்றை அணிந்துள்ளனர். வேட மிட்டு வழிபடும் இம்மூன்று பிரிவினரும் உடம்பின் மேற்பகுதியில் சட்டை அணிவது இல்லை. தென்மாவட்டங்களில் சிறுதேய்வக் கோயில்களில் சாமியாடுவோரெல்லாரும் சிவப்புநிற அரைக்காற் சட்டையும், தலையில் சிவப்புத்துணியும் அணிந்திருப்பதைப் பரவலாகக் காணலாம் எனவே இவ்வகையில் ஆடை அணிவது சிறுதெய்வ வழிபாட்டுநெறிகளில் ஒன்று என்பதால், இக்கோயிலுக் கென்று தனித்த இயல்புகன் எதனையும் அடையாளமாகக் கொண் டிருக்கவில்லை என்றறியலாம், துருத்திநீர் தெளிப்போரின் ஆடை அமைப்பு அவர்களுக்குப் போர்வீரனைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது. தலையிலுள்ள கொக்கின் இறகு அல்லது மயிலிறகு இணைந்த உருமாலும் இடுப்பிலும் மார்பிலுமுள்ள வண்ண ஆடைகளும் இவர்களுக்கு அழகிய தோற்றத்தைத் தருகின்றன. கொக்கு இறகினைத் தலையில் செருகிக்கொள்வது ஒருவகை அலங்காரம் போலும். சிவபெருமான் தலையில் கொக்கிறகினை அணிந்திருப்பதாகத் திருநாவுக்கரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/201&oldid=1468074" இலிருந்து மீள்விக்கப்பட்டது