பக்கம்:அழகர் கோயில்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 309 80 அழகுமலைக் கேகி பூசை முதலான அபிசேசுந் தான்முடிக்க எண்ணி வழக்கம் போலே அம்மண்டபம் சாலை ஏகி வழி நடந்தார் சோம்பைமலைக் கேகினார் குடத்தை விளக்கி வைத்துக் குளித்து நீராடினார் கோதி மயிருணர்த்தி கோடாலிக் கொண்டையிட்டு கொடிப் போன்ற நாமமிட்டு கையில் ஜலமேந்தி சூரியனைத் தொழுது காலைக் கடன்முடிந்து 85 தீர்த்தம் தனைப்பிடித்து கோவிலை நாடித் திரும்பிவந்தார் போரப்பட்ட மெய் சோர்ந்தார். பட்டர் வரவைத் தெரிந்து லாடர்களெல்லாம் பதறிக் கைகால் பதறுகின்ற லாடர்களை மறவுமைக் காரன் பதறாதீ ரென்று சொல்லி ஆளுக்கொரு பொட்டு வைத்தான் பட்டருட கண்ணுக்கு அகப் படாத லாடரெல்லாம் கோயில் திறக்கப் பட்டர் வயிராவிகளெல்லாம் கூசாமல் உள் நுழைந்து சுவாமி அழகைப் பார்த்து 90 கும்பத்தி லடைத்து தன்பதிக்குக் கொண்டுபோக வேணு மென்றே நினைத்து கும்பமுதற் சாமான் வெகுவிரைவாகத் தான்தேடி கோயி லடைக்கு முன்னே ஆளுக்கொரு பக்கமாகக் குந்தவைத்தார் கோயிலுக்குள் சன்னதியைப் பூட்டிப் பட்டர் கேத்திரபாலன் கோவிலில் சாவி தனை வைத்துவிட்டு வெளிக்கதவை பூட்டினார் சாவிதளைக் கைபிடித்து வெகுநேர 95 வீடுதனை நோக்கியப்போ பட்டர் குடதிசையில் வெய்யோன் மறைய மாகுதென்று பொய்கைக் கரைப்பட்டி வேகமுடன் வத்தமர்ந்தார் குடவரை வாசலெல்லாம் குப்பென்று இருல்மூடல் இப்படியே நாள்தோறும் முன்வழக்கம் போல் பட்டர் தப்பாமல் பூசை செய்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/316&oldid=1468194" இலிருந்து மீள்விக்கப்பட்டது