பக்கம்:அழியா அழகு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகொண்ட குகன் 95

தூரத்தில் உள்ள பொருளேனும் கொண்டுவர வேகமாக ஒடும் கால்கள் எங்களுக்கு இருக்கின்றன. இடையூற்றுக்கு அஞ்சமாட்டோம்; அதை விலக்கும் வில்லைக் கையிலே பிடித்திருக்கிருேம். வானுலகத்தின் மேலுள்ள பொருளாக இருந்தாலும் விரைவிலே கொண்டு வந்து விடுவோம்:

"தோல்உள துகில்போலும்;

சுகமுள தொடர்மஞ்சம் போல் உள பரண் வைகும் புரைஉள; கடிதோடும் கால் உள, சிலபூணும்

கையுள; கலிவானின் மேலுள பொருளேனும்

விரைவொடு கொணர்வேமால்." 1 [துகில் - நுண்ணிய நூலால் ஆன ஆடை. தொடர் :மஞ்சம் - கயிற்ரும் கட்டிய கட்டில். பரண், மஞ்சம்போல் உள. வைகும் - தங்கும். புரை - குறுகலாக உள்ள இடம்; இங்கே இலக்குடில். சிலே - வில். கலி - முழங்கும்.)

"தங்கள் ஆணையின் வழி நடப்பதற்கு இங்கே ஆயிரக் கணக்கில் சிலவேடர்கள் இருக்கிருர்கள். தேவரைப் போன்ற வலிமையை உடையவர்கள் அவர்கள். இங்கே ஒரு நாள் எம் குடிலில் தாங்கள் தங்கினலே காங்கள் .உய்வை அடைவோம். அப்படியிருக்க, கெடிது தங்கில்ை அதற்குமேல் வேறு கல் வாழ்வே எங்களுக்கு வேண்டிய தில்லை:'

"ஐயிரு பத்தோடைக்

தாயிரர் உளர். ஆணை செய்குநர் சிலவேடர்;

தேவரின் வலியாரால்;

1. கங்கைப், 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/103&oldid=523305" இலிருந்து மீள்விக்கப்பட்டது