பக்கம்:அழியா அழகு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அழியா அழகு

பரதன், இராமனை மீட்டும் அழைத்துச் சென்று. அயோதத மன்னன் ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கத் தோடு புறப்பட்டான். தானும் மரவுரி புனைந்து சத்துருக் கனனுடனும் தாய்மார்களுடனும் ஊரிலுள்ள பலருடனும் புறப்பட்டுவிட்டான். கங்கைக்கரையை அணுகியது. கூட்டம். வடகரையில் கூட்டம் வந்ததைத் தென் கரை யிலிருந்தே குகன் பார்த்தான். கூட்டத்தின் முன் புழுதிப் படலம் தோன்றியது. இராமனேக் காட்டுக்கு அனுப்பக் காரணமாக இருந்தவன் என்ற கினை வில்ை குகனுடைய எண்ணத்தில் பரதன் தாழ்ந்தவகை, வஞ்சகமுள்ள வகை இருந்தான். ஆகவே, பரதன் பெரிய சேனையுடன் இராமன் மேல் படையெடுத்து, மீண்டு வராமல் அவனைத் துரத்த வருவதாகவே எண்ணிக்கொண்டான். இதல்ை அவனுக்கு, அளவுக்கு மிஞ்சிய கோபம் வந்தது.

அப்படை கங்கையை அடைந்த ஆயிடைத் துப்புடைக் கடலின்நீர் சுமந்த மேகத்தை ஒப்புடை அண்ணலோ டுடற்ற வேகொலாம் இப்படை எடுத்ததென் றெடுத்த சீற்றத்தான். '

(பரதளுேடு வருகிற கூட்டம் கங்கையின் வடகரையை' அடைந்த அச்சமயத்தில், தூய்மையுடைய கடலின் ைேர உண்டு சுமந்த கருமேகத்தை ஒப்பான இராமைேடு: போரிடவே இந்தப் படை எடுப்போ?' என்று பொங்கி எழுந்த கோபத்தை உடையவனனன் குகன்.)

இராமனை கினைக்கும்போதெல்லாம் குகனுக்கு அவ: ஆணுடைய அழகிய திருமேனி அகக்கண்முன் வந்து கிற்கிறது. "கடவின் நீர் சுமந்த மேகத்தை ஒட்புடை அண்ணலாகப் பார்க்கிருன். இதற்குமுன் குகனுககு வேறு வேறு வகையில்

1. குகப்படலம், 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/114&oldid=523316" இலிருந்து மீள்விக்கப்பட்டது