பக்கம்:அழியா அழகு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவு கண்டவர் 5

தோற்றம் ஒன்று, யானையின் நிலை ஒன்று. இந்த நான்கும் கான்கு வேறு சிகழ்ச்சிகளைச் சித்திரிப்பவை. சினிமாப் படக் காரர்கள் அதற்குள் நூறு படம் எடுத்து விடுவார்கள். கம்பனே நான்கு முக்கியமான கட்டங்களில் கான்கு படங் களே எடுத்துத் தருகிருன்,

இருந்த இடத்திலிருந்து இராமன் எழுந்தான்; வானத்தை முட்டும்படியாகக் குதித்து ஒரு சிங்கம் எழுந்தது போல இருந்தது. பின்பு கம்பீரமாக கடையிட்டான்; மால்விடை மிடுக்கு நடை போடுவதுபோல இருந்தது. வில்லின் அருகில் சற்றே கின்ருன்; மேரு மலேதான் கிற் கிறதோ என்று தோன்றியது. அடுத்த படி வில்லே எடுக்க அவன் கை நீண்டது; அப்போது தன் துதிக் கையை யானே மீட்டுவது போலத் தோற்றம் அளித்தான். இந்த கான்கு கிலேகளையும் சுருக்கமாக,

மாக மடங்கலும் மால்விடை யும்பொன் காகமும் காகமும் காண கடந்தான் என்பதில் கம்பன் காட்டிவிட்டான்.

அடுத்தபடி இராமன் கையால் வில்லை எடுத்தான். அப்புறம் என்ன செய்தான் என்று கவனிப்பதற்கு முன்பே :படீர் என்ற ஒலி கேட்டது. வில் ஒடிந்து போயிற்று.

கடுப்பினில் யாரும் அறிந்திலர்: கையால் எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார். ' (கடுப்பு - வேகம். இற்றது - ஒடிந்த ஒலியை) விசுவாமித்திரர் முன்பு சொன்னது அத்தனையும் உண்மை என்பதற்கு இதைவிடச் சாட்சி வேறு எதற்கு? இராமன் தாடகையைக் கொன்ற தோள்வலியை முதலிற் சொன்னர்; அது முதல் அத்தியாயம். பின்பு

1. கார்முகப். 34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/13&oldid=523215" இலிருந்து மீள்விக்கப்பட்டது