பக்கம்:அழியா அழகு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 187°

யாவும் புரந்தரனர் தவம் என்று சொல்லி அழுகிருள் மண்டோதரி. விதி நேராகச் செல்லாமல் வளைந்து சென்று. முடித்த செயல் இது.

இரண்டு தண்டவாளத்தில் இயங்கும் வண்டியைப் போல இராவணன் தீமையும் இந்திரன் தவமும் பற்றுக் கோடாக விதி ஓடியது; கதையை கடத்தியது. விதியின் இரு வேறு பக்கங்களாகிய அவற்றில், ஒன்றைக் கதையின் தொடக்கத்தில், "இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல், துன்னருங் கொடுமனக் கூனி தோன்றிள்ை' என்று கவியின் கூற்ருகச் சொன்ன கம்பன் மற்ருென்றைக் கதையின் இறுதியில். "கடைமுறையே புரந்தரனர் பெரும். தவமாய்ப் போயிற்றம்மா!' என்று மண்டோதரியின் கற்ருக வைத்துக் காட்டுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/195&oldid=523397" இலிருந்து மீள்விக்கப்பட்டது