பக்கம்:அழியா அழகு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காளுததும் 225

புலப்படுத்துகிருன். அவள் அணிந்த மெல்லிய துகில் கணத்துக்குக் கணம் நிகழும் உடல் மெலிவால் நெகிழ, அதனை இறுகக் கட்டிக்கொள்ளும் செயலேயே எப்போதும் செய்துகொண்டிருக்கிருளாம். ரோடாமல் மாசுண்ட மேனி யோடு அமர்ந்திருக்கிருள். அனங்கவேள் கடலிலே தோன்றிய அமுது கொண்டு செய்த ஒவியம் புகையுண் டாற் போன்ற உருவத்தை உடையவளாகத் தோன்று கிருளாம்.

முன்பு எழுதாமல் திகைத்தவன் மதனன். இப்போது எழுதியவன் அனங்கவேள். முன்பு அவள் உருவைக் கையால் எழுத எண்ணின்ை; இப்போது உள்ளத்தால் உன்னி முயன்று ஒரு படைப்பைச் செய்வது போலச் செய் தான். இரண்டுக்கும் வேறுபாடு நுட்பமாகத் தெரியும்படி பாடுகிருன் கவிஞன்.

இந்த மங்கிய உருவத்தைப் பார்க்கிருன் அநுமன். அவன் உள்ளத்தே மாட்டியுள்ள படம், வண்ணச் சிறப் புள்ள படம். இங்குள்ள படமோ புகையுண்ட படம். கண்ணினல் மேலெழுந்தபடியே பார்த்தால் அதற்கும் இதற் கும் ஒப்புமை இல்லை என்றுதான் தோன்றும். கூர்ந்து கவனித்தால், கருத்தோடு கவனித்தால்தான், ஒற்றுமை தெரியும். கண்ணளவிலே காண்பவனக இருந்தால் மண்டோதரியையே சீதை என்று துணியவேண்டும்: சிதையை ரிச்சயமாகச் சிதையல்ல ளென்று புறக்கணிக்க வேண்டும். -

பேரறிவு படைத்த அநுமன் அப்படிச் செய்வான? அங்கம் இளேத்த சீதையை அவன் கண்டாலும் அவள் உள்ளத்தைக் காணும் வழி தெரிந்தவன். கருத்துக்குச் சாளரமாகிய கண்ணேக் கண்டால் அடையாளம் புலகுைம் என்பதை உணர்ந்தவன். உடம்பு இக்ளத்தாலும் கண்

வ. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/233&oldid=523435" இலிருந்து மீள்விக்கப்பட்டது