பக்கம்:அழியா அழகு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.28 அழியா அழகு

அன்று இராமனுக்கு முடிசூட்டு விழா கடகக வேண்டும். அயோத்தி மாகரமும் கோசல நாடும் அதை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. ஒவ்வொருவரும் தம் தலையில் முடிகவிக்கப்போவது போன்ற உவகையில் மூழ்கியிருக்கிருர், இராமனுக்கும் இந்தக் கணம் வரையில் தான் முடி சூடவேண்டிய நாள் இது என்ற கிகனவு இருந்து வருகிறது. சிற்றன்னையைக் காண வரும் போது அவனிடம் சுமந்திரன்,

' பொற்றட மகுடஞ சூடப்

போதுதி விரைவின் '

என்று சொல்லியிருக்கிருன்.

இந்த நிலையில், t காட்டுக்குப் போகவேண்டும்” என்ற கட்டளே இராமன் காதில் விழுகிறது. 'அரசன் இயம்பினன்' என்று கைகேயி சொல்வதில் ஆழ்ந்த குறிப்பு இருக்கிறது. யாரும் புறக்கணிக்காமல் பணிந்து ஒழுகு வதற்குரிய அரசனது ஆணே அது என்பதை நினைப்பூட்டு கிருள். அந்த வார்த்தையில் வேடிக்கையோ விளையாட்டோ யாதும் இல்லை.

வேறு ஒருவன் அந்த நிலையில் இருந்தால், "ஆ" என்று மூர்ச்சை போட்டு விழுந் திருப்பான்; அலறி யிரு பான் இருதயம் வெடித்து இறந்தும் போகலாம். சற்றே முரடனக இருந்தால் கைகேயியினிடம் தன் கோபத்தைக் காட்டியிருப்பான். இராமன் எல்லோரையும் போன்றவன் அல்லவே! அவன் என்ன செய்தான்: அவனிடம் என்ன மெய்ப்பாடுகள் உண்டாயின? கம்பன் சொல்கிருன். .

擁 脅 臻

இராமாயணக் கதையில் இது ஒரு முக்கியமான திருப்பம். இராமன், தசரதன் திட்டம் செய்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/36&oldid=523238" இலிருந்து மீள்விக்கப்பட்டது