பக்கம்:அழியா அழகு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அழியா அழகு

2

கம்பன் இராமனுடைய திருமுகச் செவ்வியைச் சொல் லுகிருன். எங்களால சொல்ல முடியாது’ என்ற முன்னுரை யுடன் அந்தச் சொல்லோவியத்தை நீட்டுகிருன்.

இப்பொழு தெம்ம ஞேரால்

இயம்புதற் கெளிதே? யாரும் செப்பருங் குணத்தி ராமன்

திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பினபு அவ்

வாசகம் உணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா

மரையினை வென்ற தம்மா! 'இராமனுடைய திருமுகச் செவ்வியைப் பார்த்தால் அது அலர்ந்த செந்தாமரையின் செவ்வியை வென்று. விட்டது' என்பது இதில் உள்ள கருத்து. அன்றலர்ந்த தாமரை” என்று கேட்ட பழக்கத்தால் அப்பொழுதலர்ந்த செந்தாமரையின வென்றது' என்று கூட்டிப் பொருள் கொள்வர் சிலர். உணரக் கேட்ட அப்பொழுது என்று: கூட்டுவதே பொருத்தம். அப்பொழுது என்பதை அலர்ந்த என்பதோடு கூட்ட இலக்கணம் இடங்தராது. இனி இதன் பொருளேச் சற்றே ஆராய்வோம்.

இராமனுடைய திருமுகச் செவ்வியை மூன்று காலங்’ களில் பார்க்கிருன் கவிஞன் கைகேயின் சுடுசொல்லைக் கேட்டதற்கு முன் ஒரு கிலே; கேட்ட பொழுது ஒரு நிலை: கேட்ட பின்பு ஒரு கிலே. இறந்த காலம், விகழ்காலம், எதிர் காலம் என்ற மூன்றில் மிகவும் நுட்பமானது நிகழ்காலம், ! எதிர்காலமாக இருப்பது இறந்த காலம் ஆவதற்கு நடுவில் உள்ள இடைகழி அது. அது மிகவும் சுருக்கமானது. அதைச் கட்டுவதற்குள் அது இறந்த காலமாக மாறிவிடும். இராம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/40&oldid=523242" இலிருந்து மீள்விக்கப்பட்டது