பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 235 இங்கேயே இருக்கட்டும். நான் அடுத்த வகுப்பை முடித்து வந்து ஏற்பாடு செய்துகொள்ளுகிறேன். நீ போகலாம். என்று கூறிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றுவிட்டார். நான் நண்பரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுப் புறப் பட்டேன். வழி நெடுக அந்த அந்தணாளர்தம் அன்பையும் பண்பையும் பரிவையும் தெளிவையும் எண்ணி எண்ணி வியந்தபடியே நின்றேன். நண்பரும் பிறகு நிலநூற்பிரிவில் இடம் பெற்று அந்த ஆண்டிலேயே ஆசிரியப் பயிற்சியை முடித்து வெற்றி பெற்று அரசாங்கக் கல்வித்துறையில் பணி ஏற்றார். பிறகு அவர்தம் உழைப்பாலும் முயற்சியாலும் தமிழகக் கல்வித்துறையில் மிக உயர்ந்ததாகிய பதவியினை யும் அடைந்தார். அவர் உயர்வை எண்ணி எண்ணி நான் மகிழ்ந்த காலமெல்லாம் பலப்பல. ஆயினும் அவர் உயர்ந்த பதவியில் இருந்தகாலை என்னிடம் மாறுபட்டு எனக்கு ஒர் தீங்கிழைத்தார் எனப் பிறர் எண்ணுமாறு ஒரு காரியம் செய் தார். ஆனால் என் வரையில் அவர் செய்த அந்தச் செயல் எனக்கு நன்மையாகவே முடிந்தது. அவர் மட்டும் அன்று அதைச் செய்யாதிருந்திருப்பாரானால் இன்று என் மக்கள் வாழும் நல்வாழ்வினை எல்லாம் நான் காணமுடியாது. அவர்கள் எந்தெந்த நிலையிலோ சென்றிருப்பார்கள்நானும் எப்படி இருந்திருப்பேன் என்று சொல்லமுடியாது. ஆகவே அவரிடம் நான் மாறுபட்டது இல்லை. மாறாக அதற்குப் பிறகு அவரைப் பாராட்டிப் போற்றியே வருகி றேன். இவை பற்றிப் பின் சென்னை வாழ்வைப் பற்றி எழுதும் போது விளக்கமாக எழுதுவேன். அரசியல் அலை வீசுவது பற்றியன்றோ பார்த்துக் கொண்டு வந்தோம். இடையில் திருநாவுக்கரசர் நம்மை வேறு எங்கோ ஈர்த்துச் சென்றார். சென்னை சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று அமைச்சர் அவை அமைந்த பிறகு நாட்டின் மாவட்டக் கழகங்கள், நகராட்சி மன்றங்களின்