பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 107

தமையனார் விநல்யூஷன், தம்பி அரவிந்தரைத் தேற்றி, தவறு உன்னுடையதுதான்ே அரு என்று ஆறுதல் கூறினார். ஆம் அண்ணா, 'நான் குறிப்பிட்டக் கப்பலில் புறப்பட வில்லை, பயணத்தை ஒத்தி வைத்து விட்டேன்' என்று தந்திக் கொடுக்காமல் போனேனே என்று அழுதபடியே கூறித் தந்தை யின் மரணத் துயரத்திலே இருந்து மீள முடியாமல் தவித்தார்.

'அம்மா, எங்கே? அண்ணா என்று கேட்டார் - அரவிந்தர் தனது மூத்த தமையனை அதற்கு அவர் வருத்தம் தொனித்தக் குரலோடு, அரு தந்தை இறந்தது முதல் அம்மாவுக்கு சித்தம் பேதலித்து விட்டது. சில நேரங்களில் நம்மை உணரும் சக்தி இருக்கிறது. பல நேரங்களில் நம்மையே யார் என்று கேட்டுகு மளவிற்கு, புத்தி தடுமாற்றம் இருக்கிறது.

தக்க மருத்துவரிடம் அம்மாவுக்கு சிகிச்சை செய்து வருகிறார் - நமது தாத்தா ரிஷி ராஜ நாராயண வசு. அவர்கள் இப்போது ரஹணி என்ற கிராமத்திலுள்ள நமது தாய் வழிப் பாட்டனார் வீட்டில் இருக்கிறார் என்றார்.

தந்தை மரணம் ஒருபுறம் அரவிந்தகோஷை வாட்டி வதைத்து தீராக் கவலையுறுத்தும்போது, தாயின் சித்தக் கோளாறு நிலை, அவரை மேலும் மனத்தை வேதனைப் படுத்தியது. கண் கலங்கினார் அரவிந்த்! தமையன் வி.நல்யூஷன் தம்பிக்குரிய மனோபலத்தை யூட்டி, தாயாரைப் பார்க்க அனுப்பி வைத்தார்.

அரவிந்த கோஷ் தனது தாயைப் பெற்ற தந்தை வீட்டுக்கு ஓடோடி வந்தார்! தாயாரைச் சந்தித்தார். அன்னையைப் பார்க்க வந்த மகனை, சொர்ணலதா தேவியால் பார்த்ததும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரவிந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது, அவரது தாய், தந்தை, தமையனார்கள் உட்பட அனைவரும் அவரை, அரு' என்றே அன்பாக அழைப்பார்கள். அந்த பழக்கத்தால், 'அம்மா, 'அரு வந்திருக்கிறேன் அம்மா என்று அரவிந்தர் தன் தாயாரைப் பார்த்து கண்ணி விட்டவாறே கூறினார்.

உடனே சொர்ணலதா தேவி, 'யார்? என் அருவா! அவன் சின்னப் பையன் ஆயிற்றே. அவனா இவ்வளவு பெரியவன் ஆகிவிட்டான்? ஊஹஇம்; இவனல்ல, என் அரு, என்றாள்.