பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $39

அந்தக் கல்லூரியில் பணியாற்ற முடியாத இருதலைக்கொள்ளி எறும்பு நிலை ஏற்பட்டது. அதனால், அவர் தனது கல்லூரி முதல்வர் பணியைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து

விட்டார்.

தேசியக் கல்லூரி மாணவர்கள் அரவிந்தருக்கு பிரிவு உபசாரம் நடத்தினார்கள். அவர்களுக்கு அவர் மீதிருந்த அன்பு காரணமாக அந்த பிரிவு வருத்தத்தை விழாவாகக் கொண்டாடி னார்கள். அந்த விழாவிலே அரவிந்தர் ஆற்றிய அறிவுரை இதோ:

'மாணவ மணிகளே! உங்களிலே சிலர் ம்கான்களாக வேண்டும் என்பதே எனது ஆசை. உங்களுக்காக அன்று; உங்களுடைய அகங்காரத்தைத் திருப்தி செய்து கொள்வதற்காக அல்ல; பாரத தாய்க்காக, தேச அன்னைக்காக நீங்கள் மகான்களாக ஆக வேண்டும்.

பாரதம், மகா பாரதமாக, உலக மக்கள் முன்னால் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து நிற்பதற்காக, பண்டைக் காலத்தில் உலகமே அதன் தலைவாயிலில் நின்று அறிவுதான்ம் கேட்டதை மெய்ப்பிப்பதற்கான கல்வியை - நீங்கள் பெற்றால் தான்் மாணவர்கள் மகான்களாக முடியும் என்றார்.