பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

என்னுடைய முயற்சிகளில் வெற்றி பெறுவேனா என்பது இப்போது கேள்வியல்ல; நான் எனது முயற்சிகளைத் தொடங்கவே இல்லையென்பது தான்் விஷயம். ஆகவே, என்னைப் பித்தனாகவே எண்ணிக் கொள்.

பைத்தியத்தின் கையில் சிக்கிய பெண் பரிதாபத்துக் குரியவள். ஏனென்றால், பெண்ணின் நம்பிக்கைகள் யாவும் உலகத்து இன்ப துன்பங்களைச் சார்ந்தவை. பைத்தியம் தன் மனைவிக்கு இன்பம் அளிப்பதில்லை; துன்பமே தருவான்.

இந்து சமயத்தை நிறுவியர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். அசாதாரணமான ஒழுக்கத்தையும், முயற்சியையும், நம்பிக்கைகளையும் அவர்கள் மிகவும் போற்றினார்கள். பைத்தியக்காரனோ; மகா புருஷனோ - இருவரையும் அவர்கள் பெரியவர்களாகவே மதித்தார்கள். ஆனால், இவற்றால் பெண்களின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறுகிறது. அவளுக்கு என்னதான்் வழி?

முனிவர்கள் இந்த வழியைக் கூறினார்கள். அவர்கள் பெண்ணினத்திடம் மற்ற மந்திரங்கள் எல்லாவற்றையும் கைவிட்டுக் கணவனே கண்கண்ட தெய்வம்' என்ற ஒரே மந்திரத்தைக் கைக் கொள்ளுங்கள். கணவனுடைய அறப் பங்காளி மனைவி; கணவன் எந்தச் செயலைத் தன் அறமாக ஏற்கிறானோ, அதற்கு உதவியாக இருங்கள். ஆலோசனை கூறுங்கள். அவனைக் கடவுளாய்க் கொண்டாடுங்கள்.

அவனுடைய இன்பத்தை உங்கள் இன்பமாகவும், அவனுடைய துன்பத்தை உங்கள் துன்பமாகவும் கருதுங்கள். எந்தக் காரியத்தை மேற்கொள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு கணவனைச் சேர்ந்தது. உதவுவதும் ஊக்குவிப்பதும் மனைவியின் பொறுப்பு என்று முனிவர்கள் கூறினார்கள்.